ஸ்வீடன் நாட்டின் முதல் பெண் பிரதமராக மக்தலினா ஆண்டர்சன் தேர்வு

பதிவு செய்த நாள் : 24 நவம்பர் 2021 17:00

ஸ்டாக்ஹோம், நவம்பர் 24,

ஸ்வீடன் நாட்டின் நிதி அமைச்சராக இருந்த  மக்தலீனா ஆண்டர்சன் ஸ்வீடன் நாட்டின் முதல் பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

ஸ்வீடன் நாடாளுமன்றத்தில் அரசுத்தீர்மானம் ஒன்றின் மீது நடந்த வாக்கெடுப்பின் போது ஒரு வாக்கு குறைந்த  காரணத்தினால் பிரதமராக இருந்த ஸ்டீபன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஸ்வீடன் நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள இடங்கள் 349.

குறைந்தபட்சமாக 175 எம்பிக்கள் ஆதரவு உடையவர் மட்டுமே பிரதமராக இருக்க முடியும்.

ஸ்வீடன் நாட்டு நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லை .அதனால் பல கட்சிகள் கூட்டுச்சேர்ந்து தான் பிரதமர் ஒருவரை தேர்ந்தெடுக்க முடியும். சமூக ஜனநாயக கட்சிக்கு 100 இடங்கள் உள்ளன .அதன் தோழமைக் கட்சி ஆகிய கிரீன் கட்சிக்கு 16 இடங்கள் உள்ளன மேலும் சில சிறிய கட்சிகளும் சமூக ஜனநாயகக் கட்சியை ஆதரிக்கின்றன.

அவற்றுடன் இடதுசாரி கட்சியும் இப்பொழுது சமூக ஜனநாயகக் கட்சி வேட்பாளரானமக்தலீனா ஆண்டர்சனை ஆதரிக்க  முன்வந்துள்ளது.

சமூக ஜனநாயக

 கட்சியின் மக்தலீனா ஆண்டர்சன் பிரதமர் பதவிக்கு போட்டியிட முன்வந்தார்.

திங்கட்கிழமை வரை தனது பெரும்பான்மையை நிரூபிக்க நாடாளுமன்றம் அவகாசம் தந்தது. ஆனால் திங்கட்கிழமை பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க மக்தலீனாவால் முடியவில்லை.

இடதுசாரிக் கட்சி ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கும்படி கோரியது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் மக்தலீனா பிரதமராக ஆதரவு தருவதாக இடதுசாரி கட்சி கூறியது. அதனை மக்தலீனா ஏற்றுக்கொண்டார் .அதைத் தொடர்ந்து புதன்கிழமை காலை  அவருக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பது நாடாளுமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது. அதனால் ஸ்வீடன் நாட்டின் முதல் பெண் பிரதமராக மக்களின் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி உள்ளது.