பங்குச் சந்தைகளில் சென்செக்ஸ், நிப்டி சரிவு

பதிவு செய்த நாள் : 22 நவம்பர் 2021 20:26

மும்பை/புது டில்லி, நவம்பர் 22,

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிப்டி வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை என்று கடும் இழப்பைச் சந்தித்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 11 70 புள்ளிகளை இழந்தது. இறுதியில் 58 465 புள்ளியில் நிலைபெற்றது.

சதவிகித அடிப்படையில் சென்செக்ஸில் இன்றைய இழப்பு 1.96 ஆகும்.

தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிப்டி இன்று 348. 25 புள்ளிகளை இழந்தது. அது இறுதியில் 17 416 புள்ளிகளில் நிலைபெற்றது.

நிப்டியின் இன்றைய இழப்பும் 1.96 சதவீதம் ஆகும்.

சென்செக்ஸ் உயர்ந்தபட்ச அளவு 62 245 புள்ளிகள் ஆகும்.

அதில் இருந்து 3700 புள்ளிகளை சென்செக்ஸ் இழந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையில் உலோகங்கள் நீங்கலாக மற்ற எல்லாத் துறைகளும் இழப்பில் முடிந்தன.

தங்கம் விலை சிறிது உயர்வு

சர்வதேசச் சந்தையில் தங்கம் வெள்ளி ஆகிய இரண்டும் எங்கு விலை உயர்வு இன்று பழைய விலைக்கு விற்றன.

ஆனால் தில்லியில் தங்கம் விலை 17 ரூபாய் 10 கிராம் தங்கத்தின் விலை 47 869 ஆகிவிட்டது.

முந்திய நாள் வர்த்தகத்தில் தங்கம் விலை 47852ல் நிலைபெற்றது குறிப்பிடத்தகுந்தது.

வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ரூ 64246ல் இருந்து ரூ.444 உயர்ந்து ரூ.64690ல் நிலைபெற்றது.

அமெரிக்க டாலருக்கு எதிரான நாணய மாற்று மதிப்பில் 10 பைசாவை இந்திய ரூபாய் இழந்தது.

ஒரு டாலருக்கு இன்றைய இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு 74 .40 ஆகும்.