அமெரிக்க கிறிஸ்துமஸ் பேரணியில் கார் மோதி 5 பேர் பலி.40 பேர் காயம்

பதிவு செய்த நாள் : 22 நவம்பர் 2021 15:27

வாவ்கேஷா (விஸ்கான்சின்), நவம்பர் 22.

அமெரிக் காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் வாவ்கேஷா  நகரில் கிறிஸ்துமஸ் பேரணியில் கார் ஒன்று புகுந்து நசுக்கி விட்டு வேகமாக ஓடி மறைந்தது.

கார் நசுக்கியதில் பேரணியில் வந்த 5 பேர் பலியானார்கள். 40 பேர் படுகாயமடைந்தனர்.

இந்தத் தகவலை வாவ்கேஷா காவல் துறைத் தலைவர் டான் தாம்சன் வெளியிட்டார்.

இந்தச் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் கிறிஸ்துமஸ் பேரணியில் வந்த குழந்தைகள் மீது மோதிய காரை போலீசார் கைப்பற்றினார்கள் காரில் இருந்த ஒருவரையும் கைது செய்தனர்.

குழந்தைகள் மீது காரை ஏற்றியவர் ஒரு தீவிரவாதி. ஆனால் அவர் யார் என்பதை இப்பொழுது கூற இயலாது.

கிறிஸ்துமஸ் பேரணியை பலர் மொபைல் மற்றும் கேமராக்களில் படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

அவர்கள் எடுத்த வீடியோக்கள் பின்னர் சமூக இணையதளங்களில் வெளியாகின.

வீடியோக்கள் சிவப்புநிற எஸ்யூவி கார் ஒன்று குழந்தைகள் பேரணியில் மோதி நசுக்கிக்கொண்டு செல்வதை தெளிவாக காட்டின.

குழந்தைகளை நசுக்கிப்போட்ட கார் மீது போலீஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.

அதனால் காரை ஓட்டியவர் பாதிக்கப்படவில்லை. அங்கு கூடி இருந்தவர்கள் காரை ஓட்டிச் செல்லும் ஆசாமி துப்பாக்கியால் கூட்டத்தினர் மீது சுட்டதாக தவறுதலாக கூறினார்கள்.

போலீஸ் அதிகாரி கார் மீது சுடுவதை விடியோக்கள் தெளிவாக காட்டின.

பேரணியில் நாட்டியம் ஆடிக் கொண்டு வந்தது எல்லாம் பெண் குழந்தைகள் 9 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்று கூறப்படுகிறது. அங்கு உள்ள தேவாலயத்தின் ஏற்பாட்டின் பேரில் பேரணி நடந்ததாக கூறப்படுகிறது.

வாவ்கேஷா நகரில்  கிறிஸ்துமஸ் பேரணி மீது கார் மோதி 5 பேரை கொன்ற சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பிடேனுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் குறித்து வருத்தம் தெரிவிக்கும் செய்தி வெள்ளை மாளிகையிலிருந்து வெளியிடப்பட்டது. நிலைமையை கண்காணித்து வருவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.