ஏர்டெல் மொபைல் கட்டணங்கள் 20 முதல் 25 சதவீதம் உயர்வு

பதிவு செய்த நாள் : 22 நவம்பர் 2021 13:37

புது டெல்லி.நவம்பர் 22.

பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது மொபைல் கட்டணங்களை 70 முதல் 75 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.

இந்தியாவின் பெரிய டெலிகாம் ஆபரேட்டர்களில் ஒன்றாக விளங்கும் ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய பிரீபெய்டு இடங்களுக்கெல்லாம் கட்டணத்தை உயர்த்தி உள்ளது.

துவக்கநிலை கட்டணங்கள் மொபைல் அழைப்புகளுக்கு 25% உயர்த்தப்பட்டுள்ளன.

வரம்பு இல்லாத அழைப்புகள் அனுமதிக்கப்படும் திட்டங்களில் மொபைல் கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

தற்பொழுது 28 நாட்களுக்கு 79 ரூபாயாக உள்ள கட்டணம் இனிமேல் 99 ரூபாயாக வசூலிக்கப்படும்.

கூடுதல் அழைப்பு நேரம் 50%. தொன்னுத்தி ஒன்பது ரூபாய் மதிப்புள்ள அழைப்பு நேரம். 200 MB டாட்டா, ஒரு வினாடிக்கு ஒரு பைசா மொபைல் அழைப்புக் கட்டணம் ஆகிய விதிகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.