மொத்த விலை பணவீக்கம் அக்டோபரில் 1.88 சதவீதம் உயர்வு

பதிவு செய்த நாள் : 15 நவம்பர் 2021 18:12

புதுடில்லி, நவம்பர் 15,

மொத்த விலை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும் பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 1.88 சதவீதம் உயர்ந்து இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் மொத்த விலை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 10.6 6 சதவீதமாக இருந்தது.

அக்டோபர் மாதத்தில் அது 12.54 சதவீதமாக உயர்ந்துள்ளது. 1.8 8 சதவீதம் ஆகும்.

மொத்த விலையை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் கடந்த 7 மாதமாக இரட்டை இலக்க அளவிலேயே இருந்து வருகிறது குறிப்பிடத்தகுந்தது.

சமீபத்தில் பெட்ரோல், டீசல், ஆகியவற்றின் மொத்த விலையை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் நிலவிய 24.81 சதவீதத்தில் இருந்து அக்டோபர் மாதத்தில் 37.18 சதவீதத்துக்கு உயர்ந்துள்ளது.

சமீபத்தில் அரசு பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் மீதான வரியை முறையே ரூ.5.10 அளவுக்கு குறைத்தது.

இதனால் நுகர்வோர் பாதிப்பு ஓரளவு குறைந்த போதிலும் இதனால் மொத்த விலை அல்லது சில்லரை விலை ஆகியவற்றின் எந்த பாதிப்பும் தொலைநோக்கு அடிப்படையில் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உற்பத்தி பொருள்கள் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் 11.41 சதவீதத்தில் இருந்து அக்டோபர் மாதத்தில் 12.0  6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

உணவுப் பொருள்களின் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 1.14 சதவீதமாக இருந்தது அக்டோபர் மாதத்தில் அந்த அளவு 3.06 சதவீதமாக உயர்ந்துள்ளது.