டி 20 முதல் உலக கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது

பதிவு செய்த நாள் : 14 நவம்பர் 2021 23:49


துபாய், நவம்பர் 14.

டி 20 முதல் உலக கோப்பையை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது.

துபாய் இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் டி 20 முதல் உலக கோப்பை இறுதிப் போட்டி ஞாயிற்றுக் கிழமை நடந்தது.

முதலில் நியூசிலாந்து அணி பேட் செய்தது .

4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை நியூசிலாந்து அணி எடுத்தது.

இரண்டாவதாக களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணி  8 விக்கெட்டுகளை கையிருப்பில் வைத்துக்கொண்டு பதினெட்டாவது ஓவரில் நூத்தி எழுபத்தி மூன்று ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

டி 20 உலக கோப்பை போட்டிக்காக ஆஸ்திரேலிய அணி ஆடிய 18 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணியின் ரன்கள்:


கானே வில்லியம்சன்-85

மார்ட்டின் குப்டில்-28

டாரில் மிட்செல்-11

கிளென் பிலிப்ஸ்-18

ஜெம் நீஷாம்-13

டிம்செல்ஃபெர்ட்-8

எகஸ்ட்ராஸ்-9

ஆஸ்திரேலிய அணி ரன்கள்:


டேவிட் வார்னர்-53

ஆரோன் ஃபிஞ்ச்-5

மிட்செல் மார்ஷ்-77

மாக்ஸ்வெல்-28

எக்ஸ்ட்ராஸ்-10

டேவிட் வார்னர். மிட்செல் மார்ஷ் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.