3 நாள் இழப்புக்கு முற்றுப்புள்ளி; சென்செக்ஸ், நிப்டி 1%க்கு மேல் உயர்வு

பதிவு செய்த நாள் : 12 நவம்பர் 2021 22:42


மும்பை /புதுடெல்லி, நவம்பர் 12,

கடந்த மூன்று நாட்களாக இழப்பை சந்தித்து வந்த மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் இன்று இழப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு முன்னேறின. மும்பை பங்குச் சந்தையின் அடையாளக் குறியீடாக கருதப்படும் சென்செக்ஸும் தேசிய பங்குச் சந்தையின் அடையாளக் குறியீடாக விளங்கும் நிப்டியும் வெள்ளியன்று விலை மதிப்பில் ஒரு சதவீதத்துக்கு மேல் உயர்ந்தன.

வெள்ளியன்று சென்செக்ஸ் 767 புள்ளிகள் உயர்ந்தது. இறுதியாக 60687 புள்ளிகளில் நிலைபெற்றது.

தேசிய பங்குச் சந்தையில் நிப்டி 229 புள்ளிகள் உயர்ந்தது.

இறுதியில் 18103 புள்ளிகளில் நிலைபெற்றது.

சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டுமே ஒரு சதவீதத்துக்கு மேல் இன்று விலை மதிப்பில் உயர்ந்தன.

மும்பை பங்குச்சந்தையில் ஐஐடி இன்டெக்ஸ் குறியீடு 2 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது.

டெலிகாம். ரியால்டி.பவர் ஆகிய துறைகளுக்கான குறியீடுகளும் இன்று 1.5 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தன.

இன்று டிஜிட்டல் மற்றும் நிதி சேவை நிறுவனம் ஆகிய

பே டிஎம் (payTM) தன்னுடைய முதல் பொது பங்கு விற்பனையை அறிவித்தது. பங்கு ஒன்றின் ஆஃபர் விலை 2150 ரூபாய் என்று அறிவித்தது.

பேடிஎம் பங்குகள் நவம்பர் மாதம் 18ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.