பங்குச்சந்தையில் சென்செக்ஸ். நிப்டி சரிவு

பதிவு செய்த நாள் : 11 நவம்பர் 2021 17:53

மும்பை/ புதுடெல்லி, நவம்பர் 11,

மும்பை பங்குச் சந்தையின் அடையாள குறியீடாக கருதப்படும் சென்செக்ஸ் இன்று 433 புள்ளிகளை இழந்தது.

தேசிய பங்குச் சந்தையின் அடையாள குறியீடாக கருதப்படும் நிப்டி இன்று 143 புள்ளிகளை இழந்தது.

சென்செக்ஸ் தன்னுடைய பங்கு மதிப்பில் 0.72 சதவீதத்தை இழந்தது .இறுதியில் 59 919 .69 புள்ளிகளில் நிலைபெற்றது.

தேசிய பங்குச் சந்தையின் நிப்டி குறியீட்டு எண் 143.60 புள்ளிகளை அல்லது அதன் பங்கு மதிப்பில் 0.80 சதவீதத்தை வியாழனன்று இழந்தது. இறுதியில் 17873.60 புள்ளிகளில் நிலைபெற்றது.

இன்றைய இழப்பில் முதல் இடத்தில் இருப்பது ஸ்டேட் வங்கி ஆகும் அது அதன் பங்கு மதிப்பில் 3 சதவீதத்தை ஒரே நாளில் இறந்து விட்டது இது தவிர பஜாஜ் பின்செர்வ் டெக் மஹிந்திரா சன்பார்மா. பஜாஜ் பைனான்ஸ் ஆக்சிஸ் வங்கி ஆகியவைகளும் ஸ்டேட் வங்கி அடுத்ததாக இழப்புகளை சந்தித்த இவற்றைத்தவிர வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஐசிஐசிஐ, எச்டிஎப்சி ஆகிய வங்கிகளும் பெரும் இழப்புக்களை சந்தித்தன.

இன்று இழப்புக்கான காரணம் குறித்து பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:

இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்கள் முதலீடுகளை எடுத்துக் கொண்டே வருகிறார்கள் நடப்பு நவம்பர் மாதத்தில் இதுவரை 5515 கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகளை வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் விலைக்கு கொண்டுள்ளன.

இந்திய முதலீட்டாளர்களுக்கும் வர்த்தகத்தில் ஈடுபடுகிறவர்கள் இருக்கும் பெரிதும் கவலை அளித்து வருகிறது.

அமெரிக்காவில் பணவீக்கம் உயர்ந்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்து பணவீக்க உயர்வு காரணமாக அமெரிக்காவில் ஃபெடரல் வட்டி உயரக் கூடும் என்ற கவலை எழுந்துள்ளது தொடரில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் அதன் தொடர் நடவடிக்கையாக பல வங்கிகளில் வட்டி விகிதம் உயரும் வாய்ப்பு உள்ளது அதன் காரணமாக உற்பத்தி செலவும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது இவையெல்லாம் இந்திய முதலீட்டாளர்களுக்கு பெரிதும் கவலை தந்துள்ளன ஆசிய மார்க்கெட்டுகளில் திருப்திகரமான நிலை இல்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக கச்சா எண்ணெய் சந்தையில் இன்றும் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது இன்றைய உயர்வு கிட்டத்தட்ட 0.63 சதவீதம் ஆகும். இன்று கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு83.16 டாலர் ஆக உயர்ந்துள்ளது.

இந்தக் காரணங்களினால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர்.