ஜாமிஆ நாஸிருல் சுன்னா அரபி கல்லூரியில் ஷானே முஸ்தபா பெருவிழா

பதிவு செய்த நாள் : 31 அக்டோபர் 2021 14:41

சென்னை

சென்னை புழல் சிறை அருகே  ஜாமிஆ நாஸிருஸ் சுன்னா அரபிக் கல்லூரியில் S.S.F சார்பில் ஷாநே- முஸ்தஃபா பெரு விழா  சிறப்புடன் நடைபெற்றது.

இதில் தலைமையுரை மவ்லானா மவ்லவி U.முஹம்மத் சலீம் சிராஜி ஆற்றினார்.

வரவேற்புரை S. பஹீம் அஹ்மத் நிகழ்த்த

மவ்லானா மவ்லவி A.காஜா முயீனுத்தீன் ஜமாலி துவக்கவுரையாற்றினார்கள் .. தொடர்ந்து.. மவ்லவி A.ஜவ்வாது ஹுஸைன் ரப்பானி மற்றும்... மவ்லவி T.P.முஹம்மது ஹாரிஸ் ஸகாஃபி மவ்லவி முஹம்மத் கவுஸ் மதனீ, ..மவ்லவி S.அஹ்மத் யூசுப் காதிரீ ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்...

இவ் விழாவின் நாயகராக அண்ணல் அஃலா ஹஜ்ரத் அவர்களின் வழித் தோன்றல் மவ்லானா மவ்லவி முஹம்மத் தவ்ஸீஃப் ரஜாகான் சாஹிப் பரேலவி அவர்கள் உருது மொழியில் சொற்பொழிவாற்றினார்.

.நன்றியுரை மவ்லானா மவ்லவி அபூதாஹிர் அஹ்ஸனீ நிகழ்த்தினார்.

விழாவின் இறுதியாக துஆ என்னும் பிரார்த்தனை மவ்லானா மவ்லவி M.கமாலுத்தீன் ஸகாபி நிகழ்த்தினார்கள்.

இவ் விழாவில் சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.