தமிழகத்தில் உள்ள கத்தோலிக்க குருமார்கள் தங்கள் டிரஸ்டுகளை மூட ஆர்ச் பிஷப் பரிந்துரை

பதிவு செய்த நாள் : 27 அக்டோபர் 2021 16:53

சென்னை, அக்டோபர் 27,

தமிழகத்திலுள்ள கத்தோலிக்க குருமார்கள் அறக்கட்டளைகளை அவற்றை நிர்வாகிக்கும் நடைமுறைகளை பின்பற்றி வருகிறார்கள் அவர்கள் அனைவரும் தனிப்பட்ட முறையில் நடத்தும் அறக்கட்டளைகளை மூட வேண்டும் என்று ஆர்ச் பிஷப் லியோபோல்டோ ஜிரெல்லி கட்டளை இட்டுள்ளார்.

நாகர்கோவில் - கோட்டாறு டயோசீஸுக்கு வருகை தந்த ஆர்ச் பிஷப் லியோபோல்டோ ஜிரெல்லி அறக்கட்டளைகள் பற்றி குறிப்பிட்டார்.

கத்தோலிக்கக் குருமார்கள் நடத்தும் அறக்கட்டளைகள் சேவை அமைப்புகளாக பதிவு செய்யப்படுகின்றன. உதவி தேவைப்படுவோருக்கு உதவி செய்வதுதான் இந்த அறக்கட்டளையின் நோக்கம் ஆகும்.

இந்த நோக்கங்களை பார்க்கும்பொழுது குருமார்களின் செயல் போற்ற தகுந்ததாக தோன்றும்.  ஆனால் கத்தோலிக்கக் குருமார்கள் நடத்தும் அறக்கட்டளைகள் எல்லாம் குருமார்கள் சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புகளின் நிதி மற்றும் அரசியல் மையங்களாக இயங்கி வருகின்றன.

தமிழகத்திலுள்ள ஆர்ச் பிஷப்புகளுக்கும் பிஷப்புகளுக்கும் தமிழ்நாடு பிஷப் கவுன்சில் உறுப்பினர் களுக்கும் எழுதிய கடிதம் ஒன்றில் ஆர்ச் பிஷப் லியோபோல்டோ ஜிரெல்லி இந்தக் கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்.

குருமார்களுக்கு ஆன நடைமுறை கட்டளை விதி எண் 286 இன் படி, குருமார்கள் தங்கள் சொந்த லாபத்துக்காக அல்லது மற்றவர்கள் லாபத்துக்காக தொழில் வர்த்தக மையங்களை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய டிரஸ்ட்களை நடத்த விரும்பும் குருமார்கள் உரிய அனுமதியினை சம்பந்தப்பட்ட அதிகார பொறுப்பில் இருப்பவர்கள் இடம் பெற்று நடத்தலாம்.

இந்த விதிமுறைகளுக்கு மாறாக தொழில் வர்த்தக அமைப்புகளின் நடத்துவோர் அவர்கள் செய்த குற்றங்களுக்கு ஏற்றபடி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் விதி 1392 கூறுகிறது.

குருமார்கள் தாங்கள் நடத்தும் வஸ்துக்களை உடனடியாக மூட வேண்டும் புதிதாக எந்த ட்ரஸ்ட்களையும் துவக்க கூடாது.

குருமார்களின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் எந்த டிரஸ்டும் இருக்கக் கூடாது.

அத்தைய டிரஸ்ட் எல்லாம் டயோசிஸ் நடத்தும் டிரஸ்ட் இன் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.

கோவை மாவட்டத்தில் உள்ள குருமார்கள் நடத்தும் டிரஸ்ட்களை டயோசிஸ் கட்டுப்பாட்டிலுள்ள டிரஸ்ட் கீழே கொண்டுவர எழுப்பவில்லை என்று கோயம்புத்தூர் ரிஷப் தாமஸ் அக்குயுனஸ் கூறினார்.

இது பற்றி முன்னாள் ஐ.ஏ.எஸ்  அதிகாரி தேவசகாயம் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் தொகை ஒன்றை கடனாகப் பெற்று மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஒன்று துவக்க முயற்சிகள் நடந்தன. இந்த முயற்சிகள் தோல்வி அடைந்ததை தொடர்ந்து ஆர்ச் பிஷப் லியோபோல்டோ ஜிரெல்லி வந்தார். அதைத்தொடர்ந்து குருமார்களில் யாரும் அறக்கட்டளை நடத்தக்கூடாது என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இது போன்ற பிரச்சனைகள் குறித்து பரிசீலிக்கவும் தயவு செய்து சொத்துக்களை நிர்வகிக்கவும் தகுதியுள்ள தொழில்நுட்ப அறிவு வாய்ந்தவர்களின் கமிட்டி பூண்டு அமைக்கப்பட வேண்டும் என்றும் நான் வலியுறுத்தி வருகிறேன்.

எல்லோரும் ஊழல் பேர்வழிகள் என்று கூறமுடியாது. ஆனால் அவர்களுக்கு விவரம் போதாது

என்று சென்னையில் உள்ள போட் கிளப் மற்றும் டி-மாண்டி சொத்துக்களை மீட்க தேவசகாயம் நடவடிக்கை எடுத்தார் என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது.