இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு ராகுல் டிராவிட் விண்ணப்பம்

பதிவு செய்த நாள் : 26 அக்டோபர் 2021 18:59

புதுடெல்லி, அக்டோபர் 26,

இந்திய கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் இன்று (26-10-2021) முறைப்படி விண்ணப்பம் செய்தார்.

ராகுல் பெங்களூரிலுள்ள தேசிய கிரிக்கெட் அணியின் தலைவராக தற்போது இருந்து வருகிறார் அவர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றதும் தேசிய கிரிக்கெட் அணியின் தலைவர் பொறுப்பை விட்டு விடுவார் என்று கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக உள்ள சவுரவ் கங்குலியும் செயலாளரும் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறார்கள் அவர்களின் ஒரே தேர்வாக ராகுல் விளங்குகிறார்.

தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக இந்திய கிரிக்கெட் கண்ட்ரோல் போர்டு ஏற்கனவே அறிவித்திருந்தது அதன்படி இன்று கடைசி நாளாகும் அதனால் கடைசி நாளான செவ்வாயன்று தனது விண்ணப்பத்தை ராகுல் டிராவிட் அனுப்பி உள்ளார்.

பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்புக்கு பரஸ் மாம்பிரே விண்ணப்பம் செய்துள்ளார்.

பயிற்சியாளர் பொறுப்புக்கு அவசரமாக விண்ணப்பம் செய்து இருக்கிறார்.

நிச்சயம் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.