கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது – 356 பேர் உயிரிழப்பு

பதிவு செய்த நாள் : 26 அக்டோபர் 2021 12:49

புதுடெல்லி

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து  428 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் 356  பேர் உயிரிழந்துள்ளனர்.

25-10-2021 அன்று இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  3,42,02,202  ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன. எனினும், பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்ப கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில்,

கொரோனா பாதிப்பு மற்றும்  உயிரிழந்தோர் விவரம்

இந்தியா முழுவதும் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 3 கோடியே 42 லட்சத்து 02 ஆயிரத்து 202 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் (கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கையிலிருந்து உயர்வு  12,428 பேர்).   

கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்பால் நேற்று 356 பேர் உயிரிழந்துள்ளனர், இதுவரை கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் 4,55,068 பேர்.   

குணமடைந்தோர்சிகிச்சையில் உள்ளோர் விவரம்

3 கோடியே 35 லட்சத்து 83 ஆயிரத்து 318 பேர் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். (நேற்றிலிருந்து இப்போதைய எண்ணிக்கை உயர்வு  15,951 பேர். 

1 லட்சத்து 63 ஆயிரத்து 816 பேர் தொடர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர் (நேற்றிலிருந்து இப்போதைய எண்ணிக்கை குறைவு 3,879  பேர்) 

இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை    3,42,02,202 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் பிற மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர், மருத்துவ சிகிச்சையில் குணமடைந்தோர் விவரப் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.