நவம்பர் 1ம் தேதி முதல் 23 ரயில்களில் பதிவில்லாப் பயணிகளுக்கு பெட்டிகள் இணைப்பு தெற்கு ரயில்வே அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 26 அக்டோபர் 2021 12:21


சென்னை, அக்டோபர் 26,

 கொரோனா தொற்றுக்கு முந்திய காலத்தில் எக்ஸ்பிரஸ் ரபில்களில் பதிவில்லாப் பயணிகளுக்கென தனிப்பெட்டிகள் இணைக்கப்பட்ட்து போல நவம்பர் 1ம் தேதிமுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரானா தொற்று காலத்தில் பதிவுப்பெட்டிகளுடன் மட்டும் ரயில்கள் இணைக்கப்பட்டன.

நவம்பர் 1ம் தேதி முதல் 23 ரயில்களில் பதிவில்லாப் பயணிகளுக்கு தனிப்பெட்டிகள் முன்பு போல இணைத்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது:

திருவனந்தபுரம்- திருச்சி ரயில்கள்- பதிவில்லாப் பயணிகள் பெட்டி 4, ராமேஸ்வரம்- திருச்சி ரயில்கள் -பதிவில்லாப் பயணிகள் பெட்டி 4,

சென்னை சென்ட்ரல்- ஜோலார்பேட்டை ரயில்கள்- பதிவில்லாப் பயணிகள் பெட்டி 6,

பாலக்காடு டவுன்- திருச்சி -பதிவில்லாப் பயணிகள் பெட்டி 6,

மேலே குறிப்பிடப்பட்ட ரயில்கள் நவ.1ந்தேதி முதல் இயங்கும்.

கன்னூர்- கோவை ரயில்கள்- பதிவில்லாப் பயணிகள் பெட்டி 4,

நாகர்கோவில் – கோட்டயம் ரயில்கள்- பதிவில்லாப் பயணிகள் பெட்டி 5,

மங்களூர்- கோவை ரயில்கள்- பதிவில்லாப் பயணிகள் பெட்டி 4,

நாகர்கோவில்-கோவை ரயில்கள்- பதிவில்லாப் பயணிகள் பெட்டி 4,

  இந்த 4 ரயில்களும் நவம்பர் 10ம் தேதி முதல் இயக்கப்படும். 

மேலும் இந்த முன்பதிவில்லா சிறப்பு ரயில்பெட்டிகளுக்கு  2-எஸ் சாதாரண டிக்கெட்டுளுக்கான கட்டணம் வசூலிக்கப்படும். 

திருவனந்தபுரம்- திருச்சி ரயிலில் பதிவில்லா பயணிகள் பெட்டிக்கு அதிவிரைவு சிறப்பு ரயிலுக்கான கட்டணம் வசூலிக்கப்படும்.