சென்னையில் பாதுகாப்பான தீபாவளி கொண்டாட்டம் - தீயணைப்பு துறையினர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

பதிவு செய்த நாள் : 26 அக்டோபர் 2021 10:58

சென்னை

தமிழகம் முழுவதும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி அன்று பட்டாசு வெடித்து அனைவரும் கொண்டாடி மகிழ்ச்சியுறுவர். பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் தீ விபத்து குறித்து சென்னையில் தீயணைப்பு துறையினர் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி  நடத்தினர். 

பட்டாசு வெடிக்கும்போது தீவிபத்து ஏற்பட்டால் எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என சென்னை முகப்பேர் வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்பாதுகாப்பான தீபாவளி கொண்டாட்டம் குறித்து  தீயணைப்பு துறையினர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி  நடத்தினர்

இதில் ஒவ்வொரு வெடிகளையும் எவ்வளவு தூர இடைவெளியில் வெடிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு விளக்கினர்.

இதன் பின்னர் மாணவ மாணவியரின் கண்கவர் நடனங்களும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தீயணைப்புத்துறையின் இணை இயக்குனர்  பிரியா  ரவிச்சந்திரன்,  மாவட்ட அதிகாரி சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்