சூடான் நாட்டில் இராணுவ புரட்சி - பிரதமர் , அமைச்சர்கள் பலர் கைது

பதிவு செய்த நாள் : 25 அக்டோபர் 2021 10:25

கார்ட்டூம், அக்டோபர் 25,

சூடான் பிரதமர் ராணுவ புரட்சிக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட மறுத்த காரணத்தினால் கைது செய்யப்பட்டு அடையாளம் தெரியாத ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்று தகவல் தொடர்பு அமைத்து அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

சூடான்  பிரதமர் அப்தல்லா அலுவலகத்தை ராணுவம் சூழ்ந்து கொண்டுள்ளது. வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு உள்ளார் என்று துபாயில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டது.

அதைத் தொடர்ந்து தகவல் தொடர்பு அமைச்சரின் செய்தி வெளியானது.

ராணுவ ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையை அங்கீகாரம் செய்ய பிரதமர் அப்துல்லா மறுத்துவிட்டார் அதனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் தொடர்பு அமைச்சரின் அறிக்கை கூறுகிறது.

சூடான் நாட்டின் தொழில் துறை அமைச்சர் ராகி அல் ஷேக், சூடான் தலைநகரின் ஆளுநர் செய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் திங்கட்கிழமை விடியும் முன்னர் அவர் அவர் வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர் தொழில்துறை அமைச்சர் கைது செய்யப்பட்டதை அவரது மகளும் ஆளுநர் கைது செய்யப்பட்டதை அவரது மனைவியும் உறுதி செய்துள்ளனர்.

2019 இல் மக்கள் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நாட்டின் தலைவராக இருந்த உமர் அல் பஷீர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அத்துடன் 2023 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சிப் பொறுப்பில் நிறுத்தப்பட வேண்டும் என்று உடன்பாடு ஏற்பட்டது.

சென்ற மாதம் ஆட்சியை தன் கையில் எடுத்துக்கொள்ள ராணுவம் முயற்சி செய்தது அந்த முயற்சியும் முறியடிக்கப்பட்டது.

ராணுவமும் சூடானில் உள்ள சிவில் அமைப்புகளும் இப்பொழுது ஒன்றுக்கு ஒன்று எதிராக செயல்படுகின்றனர்.

பிரதமரும் அமைச்சரும் கைது செய்யப்பட்ட செய்தி வெளியானதும் சூடானில் உள்ள சிவில் சேவை அமைப்புகள் எல்லாம் மக்கள் சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி போராட்டம் நடத்த முன் வரும்படி அழைப்பு விடுத்துள்ளது.

சூடான் நகரங்களில் தகவல்தொடர்பு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

சூடான் நாட்டின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பவில்லை அதற்குப் பதிலாக தேசபக்தி பாடல்களை ஒளிபரப்பி வருகிறது அத்துடன் நைல் நதி பற்றிய வீடியோக்களையும் ஒளிபரப்பி வருகிறது.