ஜம்மு-காஷ்மீரில் எல்லோருக்கும் வளர்ச்சி; யாரையும் ஒதுக்க இயலாது: அமித் ஷா பேச்சு

பதிவு செய்த நாள் : 24 அக்டோபர் 2021 18:44

ஜம்மு, அக்டோபர் 24,

ஜம்மு-காஷ்மீரில் இனி எல்லோருக்கும் வளர்ச்சி உறுதி செய்யப்படும் யாரையும் யாரும் ஒதுக்கி வைக்க இயலாது என்று ஜம்முவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை (24-10-2021) அன்று கூறினார்.

ஜம்மு நகரில் உள்ள பாரதி நகர் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

ஜம்மு - காஷ்மீரில் 2022-ம் ஆண்டுக்குள் 51,000 கோடி முதலீடு திரட்டப்படும் என்று அரசு நம்புகிறது ஏற்கனவே 12,000 கோடி ரூபாய் முதலீடாக வந்துள்ளது ஜம்மு-காஷ்மீரில் இளைஞர்கள் வளர்ச்சிப் பணிகளில் பங்கு கொள்ள துவங்கிவிட்டால் பயங்கரவாதிகள் தோல்வியடைவது என்று அமித்ஷா கூறினார்.

காஷ்மீரில் பயங்கரவாதம் துடைத்து எடுக்கப்படும் இங்கு பொதுமக்கள் யாரும் துப்பாக்கி குண்டுக்கு இரையாக அரசு அனுமதிக்காது என்று துறை அமைச்சர் அவர்கள் கூறியபொழுது பேரணி கூடியிருந்த மக்கள் பெருத்த ஆரவாரத்துடன் கைகளில் எழுப்பினார்கள்.

முன்னதாக ஜம்மு நகரில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி  அமைப்பினை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா துவக்கி வைத்தார்.

3 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக சனிக்கிழமையன்று ஜம்மு காஷ்மீர் வந்து சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆய்வு கூட்டத்தை நடத்தினார். அக்டோபர் மாதத்தில் பயங்கரவாதிகளின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையான போலீசார் இல்லங்களுக்கு சென்று ஆறுதல் தெரிவித்தார்.

ஸ்ரீநகரில் விமானம் மூலம் ஜம்மு நகருக்கு வந்த அமைச்சர் அமித் ஷா ஜம்மு நகரில் ஏற்பாடு செய்திருந்த பேரணியில் கலந்து கொண்டார்.

மத்திய உள்துறை அமைச்சருடன் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் உயர் அதிகாரிகள் மத்திய உள்துறை அமைச்சருடன் நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்.

ரூ.210 கோடி செலவில் ஜம்முவில் ஐஐடி அமைக்கப்படும் எல்லா வசதிகளும் கொண்டதாக சித்திவளாகம் அமையும் மாணவர்களுக்கு தங்கும் விடுதி உடற்பயிற்சி அரங்கம் உள்விளையாட்டு அரங்கம் ஆகியவற்றுடன் உயர்கல்வி அமைப்பாக விளங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஜம்மு நகரில் நடந்த பேரணிக்கு  பிறகு ஜம்முவில் உள்ள டிஜியானா குருத்துவாராவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்றார்.

மத்திய உள்துறை அமைச்சருடன் பிரதமர் அலுவலக அமைச்சரான ஜிதேந்திர சிங்கும் சென்றார்.

சனிக்கிழமை மாலையில் இருந்து ஸ்ரீநகர் மற்றும் மலைப்பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது கணவாய் பகுதிகளில் பலர் சிக்கிக் கொண்டனர் அவர்களை எல்லை சாலைகள் அமைப்பைச் சார்ந்தவர்களும் ராணுவத்தினரும் மீட்டனர்.