சீனாவில் புதிய எல்லை சட்டம் உருவாகிறது

பதிவு செய்த நாள் : 24 அக்டோபர் 2021 18:15

பெய்ஜிங், அக்டோபர் 24,

சீனாவில் புதிய எல்லை சட்டத்திற்கு சீன நாடாளுமன்றம் ஒப்புதல் தந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் பரிந்துரைக்கப்பட்ட புதிய எல்லை சட்டம் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள காரணத்தினால் வரும் ஜனவரி முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதில் அரசு ராணுவத்தில் பணிகள் என்ன என்று இந்த புதிய எல்லை சட்டம் வரையறை செய்கிறது.

சீனாவின் உயிர்களைப் பாதுகாக்க ராணுவம் மேற்கொள்ளும் மோதல்களை இந்தச் சட்டம் அங்கீகாரம் செய்கிறது.

இந்தியா, பூட்டான், ஆசிய நாடுகளுடன் மலைகள், தரை எல்லை தொடர்பு உள்ள நாடு சீனா.

இந்திய - சீன எல்லைப் பிரச்சனை இன்னும் முடிவு பெறாமல் நீடித்து வருகிறது.

கடல் எல்லைகளை பொருத்தமட்டில் பல நாடுகளுடன் சீனாவுக்கு இன்னும் தகராறு உள்ளது.

இந்த நிலையில் எல்லை சட்டம் ஒன்றை சீனா இயற்றி உள்ளது.

எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் எல்லைப் பகுதிகளில் சமூக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் எல்லைப் பகுதிகளில் கட்டமைப்பு வசதிகளை புதிதாக உருவாக்கவும் மேம்படுத்தவும் இந்த சட்டம் வகை செய்கிறது.

இந்திய - சீன எல்லைப் பகுதிகளில் 628 புதிய கிராமங்களை உருவாக்கவும் சீனாவில் உள்ள புதிய சட்டம் வகை செய்கிறது.

கிழக்கு லடாக் பகுதியிலும் கல்லார் பள்ளத்தாக்கு பகுதியிலும் இந்தியாவும் சீனாவும் ஏற்கனவே செய்து கொண்ட அமைதி காப்புப் ஒப்பந்தங்களுக்கு எதிராக சீன ராணுவம் இப்பொழுது செயல்பட்டு வருகிறது என்று இந்தியா ஆகியவை குற்றம் சாட்டுகின்றன.

இத்தகைய குற்றச்சாட்டுகள் சீன ராணுவம் மீது சுமத்தப்படுவதில் இருந்து விலக்கு அளிக்க சீனாவின் புதிய எல்லைச் சட்டம் வகை செய்கிறது.