50 லட்சம் டாலர் தலைக்கு விலை வைக்கப்பட்ட போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன் ஒட்டோனியல் கைது

பதிவு செய்த நாள் : 24 அக்டோபர் 2021 17:58

போகோடா (கொலம்பியா), அக்டோபர் 24,

50 லட்சம் டாலர் உயிருடனோ பிணமாகவோ பிடித்து தருவோருக்கு வழங்கப்படும் என்று அமெரிக்காவின் அறிவிக்கப்பட்ட கொலம்பியா நாட்டு போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன் ஒட்டோனியல் ஞாயிறன்று கைது செய்யப்பட்டார்.

கொலம்பியா நாட்டின் படைவீரர்கள் கைது செய்து போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவரை அழைத்து வருவதை காட்டும் விடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவும் பிரிட்டனும் செயற்கைக்கோள்கள் உதவியால் கொலம்பியா நாட்டின் வனப்பகுதியில் ஒட்டோனியல் மறைந்திருப்பதை கொலம்பியா போலீசார் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து 500 ராணுவ வீரர்கள் 22 அளிக்கப்பட்டது அவரை கைது செய்ய பயன்படுத்தப்பட்டன.

கொலம்பியா வனப்பகுதியில் போதை மருந்து கடத்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கை இது என்று கொலம்பியா நாட்டு அதிபர் இவான் ட்யூக் தெரிவித்தார்.

தான் பிறந்த சொந்த மாநிலமான ஊர்பா வனப்பகுதியில் ஒட்டோனியல் கைது செய்யப்பட்டார்.

அவர் மொபைல் போன்களைகூட பயன்படுத்துவதில்லை நபர்கள் மூலமாகத்தான் செய்திகளை அனுப்புவது வழக்கம்.

மழைக்காட்டில் மறைந்து வாழ்ந்து வந்த ஒட்டோனியலை ராணுவம் கைது செய்தது.

2009ஆம் ஆண்டு நியூயார்க் மத்திய நீதிமன்றத்தில் போதை மருந்து கடத்தலில் க்கு எதிராக ஒட்டோனியல் மீது வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கு தொடர்பாக ஒட்டோனியலை கைது செய்து ஒப்படைத்தால் 50 லட்சம் டாலர் தருவதாக அமெரிக்க காவல்துறை அறிவித்துள்ளது.

கொலம்பியா நாட்டில் ஒட்டோனியல் மீது பல வழக்குகள் உள்ளன. அதனால் அவர் உடனடியாக அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.