இந்திய பங்குச்சந்தைகளில் வெள்ளியன்று சரிவு

பதிவு செய்த நாள் : 22 அக்டோபர் 2021 18:08

மும்பை, அக்டோபர் 22,

மும்பை பங்குச் சந்தையின் அதிகாரபூர்வ குறியீடு  ஆகிய சென்செக்ஸ், டெல்லி தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி ஆகிய இரண்டும் வெள்ளியன்று சரிவை சந்தித்தன.

சென்செக்ஸ் வெள்ளியன்று 101.88 புள்ளிகளை இழந்தது இது அதன் சதவீத மதிப்பில் 0.17 சத விகிதத்துக்கு சமமாகும்.

இறுதியில் 60821..62 புள்ளிகளில் சென்செக்ஸ் நிலைபெற்றது.

நிப்டி வெள்ளியன்று 63.20 புள்ளிகளை இழந்தது. ஒட்டுமொத்த புள்ளிகளில் 0.35 சதவீதம் ஆகும்.

இறுதியில் 18114. 90ல் நிலைபெற்றது.

சென்செக்ஸ் இழப்பில் மிகக் கூடுதலான நஷ்டம் ஐடிசி நிறுவனத்துக்குத்தான்.

இன்று லாபம் அடைந்த நிறுவனங்கள் எச்டிஎஃப்சி, பஜாஜ் ஆட்டோ, இன்டஸ் இன்ட் பேங்க் ,கோடக் பேங்க், டைட்டன் ஆக்சிஸ் பேங்க் முதலியன.

மூன்று பைசா சரிவு

அமெரிக்க டாலருக்கு எதிரான நாணயமாற்றில் இந்திய ரூபாயின் மதிப்பு இன்று மூன்று பைசாகளை இழந்தது.  இறுதியில் ஒரு டாலருக்கு 74.90 என்ற நாணய மாற்று மதிப்பில் நிலைபெற்றது.

கச்சா எண்ணெய்

இன்று உலக கச்சா எண்ணெய் சந்தையில் ஒரு பீப்பாய் பிரென்ட் விலை 85. 05ஆக உயர்ந்தது.