இந்திய மக்களுக்கு 100 கோடி தடுப்பூசி: இந்தியா சாதனை

பதிவு செய்த நாள் : 21 அக்டோபர் 2021 20:05

புதுடெல்லி அக்டோபர் 21

இந்திய மக்களுக்கு 100 கோடி கொரோனா தடுப்பு ஊசிகளை செலுத்தி இந்திய அரசு புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது .

இந்த சாதனைக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் இந்திய அரசையும் அதன் சுகாதாரத்துறை ஊழியர்களையும் உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது.

இந்திய மக்களுக்கு 100 கோடி தடுப்பூசி போட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக பூட்டான் அரசும் இலங்கை அரசும் இந்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளன.

இந்திய மக்களுக்கு 100 கோடி தடுப்பூசிகள் போட்டதற்காக பாராட்டு தெரிவிக்கும் விடியோ மற்றும் பாட்டு ஒன்றை மத்திய சுகாதார அமைச்சர் பதவியை இன்று டெல்லியில் வெளியிட்டார்

அந்தப் பாடலை கைலாஷ் என்பவர் பாடி வெளியிட்டுள்ளார் விடியோ 100 கோடி தடுப்புசி செலுத்தும் சாதனையை நிகழ்த்தி அதற்காக இந்தியாவில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் நம்முடைய அப்ப விஞ்ஞானிகள் மருத்துவர் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் நிபுணர்கள் சுகாதாரத்துறை மருத்துவர்கள் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுதவிர இந்தியாவின் தடுப்பூசி சாதனையை கொண்டாடும் வகையில் அதிக தொழில் கமிஷன் 225 அடி நீளமும் 150 அடி அகலமும் தேசிய கொடி இலை தயாரித்துள்ளது இந்த கட் தேசிய கதர் கொடி கீழே பள்ளத்தாக்கில் ஏற்றப்பட்டுள்ளது அதுவும் காந்தி பிறந்த அக்டோபர் 2-ம் தேதி இந்த கொடி சீன எல்லையில் உள்ள பள்ளத்தாக்கில் ஏற்றப்பட்டன குறிப்பிடத்தக்கது. இந்த 225 அடி நீளமும் 150 அடி அகலமும் கொண்ட தேசியக்கொடியின் மொத்த எடை 1400 கிலோ ஆகும்.

வலிமை வாய்ந்த கேடயம்

covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிராக இந்தியாவில் 100 கோடிப் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட இருப்பதன் காரணமாக இந்தியாவிற்கு அது வலிமை வாய்ந்த கேடயமாக அது அமைந்துள்ளது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார் 

கடந்த நூறு ஆண்டுகளில் இதுவரை ஏற்பட்டுள்ள தொற்று நோய்களில் எல்லாம் மிகவும் மோசமான தொற்று நோயாக கோபிக்கு 19 தொற்றுநோய் அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார் 

இந்தியா 100 கோடி தடுப்பூசியில் வியாழக்கிழமையன்று தாண்டியது குறிப்பிடத்தக்கது இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 75 சதவீதம் பேர் தடுப்பூசியில் ஒரு தோசை ஆவது இதுவரை செலுத்தப்பட்டு உள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரம் கூறுகிறது இந்தியாவின் 9 மாநிலங்கள் அதன் யூனியன் பிரதேசங்கள் 100% 18 வயதுக்கு மேற்பட்டு உள்ளவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி அளித்துள்ளனர் என்று அந்த புள்ளி விவரம் கூறுகிறது இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 37% பேர் 2 நோஸ் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர் உத்தரப் பிரதேசம் மகாராஷ்டிரம் மேற்கு வங்காளம் குஜராத் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மிக அதிகமான எண்ணிக்கையில் தடுப்பூசி பெற்ற மாநிலங்களாக விளங்குகின்றன.