மீலாதுன்நபி திருநாள் நல்வாழ்த்துகள் - ஓபிஎஸ், இபிஎஸ்

பதிவு செய்த நாள் : 19 அக்டோபர் 2021 11:04

சென்னை

இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த இப்புனித நாளில் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் அதிமுக சார்பில் ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் அதிமுகவினர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த இப்புனித நாளில், உலகில் அமைதியும், சகோதரத்துவமும் நிறைந்து, அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட  அஇஅதிமுகவின் "மீலாதுன் நபி" நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் அதிமுக சார்பில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஓபிஎஸ் வாழ்த்து

இறைத்தூதர் அண்ணல் நபிகள்நாயகம் அவர்கள் பிறந்த இப்புனித நாளில், உலகில் அமைதியும் சகோதரத்துவமும் நிறையவும், நலமும் வளமும் பெருகவும் வாழ்த்தி, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் அன்பார்ந்த மீலாதுன்நபி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு ஓபிஎஸ் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

இபிஎஸ் வாழ்த்து

இறைத்தூதர் முகமது நபிகள் பிறந்த நன்னாளை இறை உணர்வோடு கொண்டாடும்  அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் எனது உளங்கனிந்த மீலாதுன் நபி நல்வாழ்த்துக்கள். உலகெங்கும் அமைதி நிலவி, சகோதரத்துவமும், அன்பும் பூரணமாக  நிறையட்டும்.

இவ்வாறு இபிஎஸ் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.