சென்னையில் ஞாயிறு அன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு

பதிவு செய்த நாள் : 17 அக்டோபர் 2021 16:37

மும்பை, அக்டோபர் 17,

வாராந்திர விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்றும் பெட்ரோல் டீசல் விலை தலா 35 பைசா உயர்த்தப்பட்டது.

கடந்த 4 நாட்களாக எண்ணெய் கம்பெனிகள் நாளொன்றுக்கு 35 பைசா வீதம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்துள்ளன.

ஞாயிற்றுக்கிழமை உயர்வோடு இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோ, பேருந்து ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் பெட்ரோலின் விலை, விமான பெட்ரோல் விலையை விட 33 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இந்தியாவின் மெட்ரோபாலிட்டன் நகரங்களான சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் மும்பையில் மட்டும் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 110 ரூபாய்க்கும் கூடுதலாக விற்கப்படுகிறது 

மெட்ரோபாலிட்டன் நகரங்கள் நான்கிலும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயைத் தாண்டிவிட்டது.

மெட்ரோ நகரங்களில் மும்பையைத் தவிர மற்ற நகரங்களில் எல்லாம் டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாய்க்கும் குறைவாகவே உள்ளது.

இன்றைய பெட்ரோல் டீசல் விலை உயர்வு விபரம்: