இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்கிறார்

பதிவு செய்த நாள் : 16 அக்டோபர் 2021 18:56

புதுடெல்லி, அக்டோபர் 16,

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்க உள்ளார்.

இந்திய கிரிக்கெட் கண்ட்ரோல் போர்டு ராகுல் டிராவிட் பேசிய பொழுது அவர் அதில் ஆர்வம் காட்டவில்லை.

ஐக்கிய அரபு எமிரேட் டுகளில் டி20 போட்டிகள் நடந்த பொழுது அதற்காக சென்றிருந்த இந்திய கிரிக்கெட் கண்ட்ரோல் போர்டு தலைவர் சௌரவ் கங்குலி. கிரிக்கெட் கண்ட்ரோல் போர்டு செயலாளர் ஜெய் ஷா ஆகிய இருவரும் ராகுல் டிராவிட் டுடன் பேசிய பொழுது அவர் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரவிசாஸ்திரி விலகியதும் முறைப்படி இந்திய கிரிக்கெட் கண்ட்ரோல் போர்டு தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விளம்பரம் வெளியிடும் .

ராகுல் டிராவிட் முறைப்படி விண்ணப்பம் செய்ய வேண்டும். அதன்பிறகு நேர்முகத் தேர்வு நடைபெறும் ராகுல் டிராவிட் முறைப்படி தேர்வு செய்யப்படுவார்.

தற்பொழுது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அணியின் தலைவராக ராகுல் டிராவிட் இருக்கிறார்.

இப்பொழுது வாங்கும் ஊதியங்களை விட ராகுல் டிராவிட்டுக்கு கூடுதல் ஊதியம் தர இந்திய கிரிக்கெட் கண்ட்ரோல் போர்டு சம்மதம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ராகுல் டிராவிட்டின் நண்பர் பரஸ் பந்து வீச்சுக்கு பயிற்சி அளிப்பார் என்றும் பேட்டிங் வீச்சுக்கு விக்ரம் ரத்தோர் பயிற்சி அளிப்பார் என்றும் தெரிகிறது. அதற்கான நியமனங்களும் முறைப்படி நடைபெறும் என்று கூறப்படுகிறது.