சென்னையில் பெட்ரோல், டீசல் விலை வெள்ளியன்று உயர்வு

பதிவு செய்த நாள் : 15 அக்டோபர் 2021 14:36

சென்னை, அக்டோபர் 15,

இந்தியாவின் மெட்ரோபாலிட்டன் நகரங்களான சென்னை மற்றும் மும்பையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

நியூ டெல்லி, கொல்கத்தா ஆகிய இரண்டு நகரங்களிலும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய்க்கு அதிகமாக உயர்ந்துள்ளது. ஆனால் இந்த இரண்டு நகரங்களிலும் டீசல் விலை 100 ரூபாய்க்கு குறைவாக உள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை 14-வது நாளாக வெள்ளிக்கிழமை அன்று உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் டீசல் விலை 17வது நாளாக இன்று உயர்த்தப்பட்டிருக்கிறது.

சர்வதேச கச்சா எண்ணெய் விற்பனை சந்தையில் விலை 0.58% உயர்ந்துள்ளது. அதன் காரணமாக ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயில் விற்பனை விலை 84.50 டாலராக உயர்ந்துள்ளது.