தமிழ்நாட்டில் முதன்முறையாக இன்று 1 லிட்டர் டீசல் விலை ரூ.100ஐக் கடந்து விற்பனை

பதிவு செய்த நாள் : 14 அக்டோபர் 2021 14:27

சென்னை

தமிழ்நாட்டில் முதன்முறையாக இன்று 1 லிட்டர் டீசல் விற்பனை விலை ரூ.100ஐக் கடந்தது. வாகன ஓட்டிகள் கவலை

தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் டீசல் விலை ரூ.100ஐ கடந்துள்ளதால் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல்,டீசல் ஆகியவற்றின் விலை தினமும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விலை அதிகரித்து வருகிறது.

பெட்ரோல் விலை நாடு முழுவதும்  100 ரூபாயை கடந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக டீசல் விலையும் 100 ரூபாயை கடந்துள்ளது. 

கடலூர் மாவட்டம் குமராட்சியில் 1  லிட்டர் டீசல்  ரூ.100.29க்கு விற்பனை செய்யப்படுகிறது.

காட்டுமன்னார் கோவில் பகுதியிலும் 1 லிட்டர் டீசலின் விலை 100 ரூபாயை கடந்தது. கடலூரில் பெட்ரோல் விலை 1 லிட்டர் ரூ.104.16, டீசல் விலை ரூ 99.95க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரு லிட்டர் டீசல் ரூ 98.52க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 105.87 ஆக உள்ளது.

சேலத்தில் ஒரு லிட்டர் டீசல் ரூ.98.27க்கும்  ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.42க்கும் விற்பனை செய்யப்படுகிறது.