நீட் விலக்க மசோதாவுக்கு ஒப்புதல் தர ஆளுநரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2021 19:00

சென்னை,

தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்க மசோதாவுக்கு  ஒப்புதல் அளிக்கும்படி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான முன்னாள் நீதியரசர் ஏ.கே.ராஜன் அறிக்கை கடந்த செப்டம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்டு நீட் தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மசோதா தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த செப்டம்பர் 18ந்தேதி பதவி ஏற்ற தமிழக

ஆளுநரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நேரில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பில் முதலமைச்சருடன், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலாளர் வெ.இறையன்பு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆளுநருடன் நீட் விலக்கு கோரும் தமிழக அரசின் மசோதா  குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.