அருணாச்சலப் பிரதேசத்தில் வெங்கையா நாயுடு பயணம்: சீனா கண்டனத்தை நிராகரித்தது இந்தியா

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2021 18:34

இட்டாநகர் (அருணாசலப் பிரதேசம்), அக்டோபர் 13,

அருணாசலப் பிரதேசத்தில் சென்ற வாரம் இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சுற்றுப் பயணம் செய்ததற்கு சீனா கடும் ஆட்சேபம் தெரிவித்தது சீனாவின் ஆட்சேபத்தை இந்தியா முழுமையாக நிராகரித்து உள்ளது.

சென்ற வாரம் சனிக்கிழமை என்று இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அருணாசலப் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அருணாசலப் பிரதேசத்தின் தலைநகரான இட்டால் நகரிலுள்ள அருணாசலப் பிரதேச சட்ட மன்றத்திற்கும் அவர் சென்றார் அங்கு அருணாசலப் பிரதேச சட்டமன்றத் தலைவர் இந்திய குடியரசுத் தலைவருக்கு கையால் வரைந்த சித்திரம் ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார்.

அருணாச்சல பிரதேசத்திற்கு இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்றது குறித்து சீன வெளியுறவுத்துறை கருத்து ஏதேனும் தெரிவிக்காததால் என்று அரசு தொலைக்காட்சி நிறுவன செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார் அதற்கு சீன வெளியுறவுத்துறை பேச்சாளர் ஜாவோ லிஜியான் பதில் அளித்தார்.

இந்திய அரசு உருவாக்கிய அருணாசலப் பிரதேசம் என்ற மாநிலத்தை இந்தியாவின் அங்கமாக சீனா ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை இந்தியா தானாக சட்டவிரோதமாக அருணாசலப் பிரதேசத்தை உருவாக்கியுள்ளது இந்திய தலைவர்கள் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளுவது சீனா தொடர்ந்து கண்டனம் செய்து வருகிறது இந்திய தலைவர்கள் அருணாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது எல்லைப் பிரச்சினையை மேலும் சிக்கலாகிறது அதைவிட பரஸ்பரம் உள்ள நம்பிக்கையை இத்தகைய பயணங்கள் சீர்குலைக்கிறது.

அருணாசலப் பிரதேசத்தில் 90 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. ஏற்கனவே 38 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பில் மேற்கு பகுதியில் சீனா ஆக்கிரமித்துள்ளது.

சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்திலும் அருணாச்சலப் பிரதேசம் தவாங் என்ற இடத்திலும்  இந்திய - சீன ராணுவத்தினர் கைகலப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.

சீன வெளியுறவுத்துறை பேச்சாளர் தெரிவித்த ஆட்சேபத்தை இந்திய வெளியுறவுத்துறை பேச்சாளர் அரிந்தாம் பக்ஷி முழுக்க நிராகரித்தார்.

இந்திய - சீன எல்லைப் பகுதியில் சீனா தன்னிச்சையாக படைவீரர்களின் எண்ணிக்கையும் ராணுவ சாதனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததால் அதனை ஈடுசெய்ய இந்தியாவும் தன்னுடைய படை வீரர்களை அதிகரிக்க வேண்டியுள்ளது இதனால் எல்லையில் பதற்றம் ஏற்படுகிறது சீனா தன்னுடைய ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை கைவிட்டால் இந்திய-சீன எல்லையில் பதற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை.

ஆண்டாண்டு காலமாக அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய தலைவர்கள் செல்வது சுற்றுப்பயணம் மேற்கொள்வது ஆகியவை தொடர்ந்து நடந்து வருகிறது இந்திய குடியரசுத்தலைவர் அருணாசலப் பிரதேசத்துக்குச் சென்ற காரணத்தினால் எல்லையில் பதற்ற நிலை மிகவும் மோசமடையும் என்று சிலர் கூறுவது ஏற்கமுடியாத கருத்தாகும். இவ்வாறு இந்திய வெளியுறவுத்துறை பேச்சாளர் மறுப்பு தெரிவித்தார்.