புல்வாமாவில் நடந்த தாக்குதலில் ஜேஇஎம் கமாண்டர் பலி

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2021 17:45

ஸ்ரீநகர், அக்டோபர் 13,

புல்வாமா பள்ளத்தாக்கில் தில்வானி முஹால்லா வாஹ்ஹார்டு என்ற இடத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே புதன்கிழமையன்று துப்பாக்கி சண்டை நடந்தது.

இந்த சண்டையில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.

கொல்லப்பட்ட தீவிரவாதியை உள்ளூர் போலீசார் அடையாளம் கண்டு பிடித்தனர் அவர் பெயர் சாம் சோபி. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் கமாண்டர் ஆவார்.

புதன்கிழமை நடந்த துப்பாக்கி சண்டையில் கடந்த 2 நாட்களில் நடந்த 6வது மோதல் ஆகும்.

ஜம்மு-காஷ்மீரில் மக்கள் மத்தியில் வெறுப்பும் பிரிவினை எண்ணத்தையும் எழுப்பும் வகையில் பொதுமக்களை சுட்டுக் கொல்ல உதவியதாக எதிர்ப்பு முன்னணி என்ற பெயரில் இயங்கி வரும் அமைப்பை சேர்ந்தவர்கள் 4 பேரை தேசிய புலனாய்வு ஏஜென்சி கைது செய்துள்ளது.

பொதுமக்களை சுட்டுக் கொல்வதில் எதிர்ப்பு முன்னணியின் பங்கு குறித்து ஆய்வு செய்து திட்டம் இடுவதற்காக 900 பேரை தேசிய புலனாய்வு ஏஜென்சி கைது செய்து விசாரித்து வருகிறது.

தேசிய புலனாய்வு ஏஜென்சியோடு உள்ளூர் போலீசாரும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.