ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை அமல் செய்ய உலக நாடுகள்ஆப்கானிஸ்தானை வலியுறுத்த இந்தியா அழைப்பு

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2021 12:46

புதுடெல்லி, அக்டோபர் 13,

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இயற்றிய தீர்மானத்தை அமல் செய்யும்படி உலக நாடுகள் ஒன்றாக இணைந்து வலியுறுத்த வேண்டும் என்று ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு வீடியோ கான்பரன்சிங் முறையில் செவ்வாயன்று நடைபெற்றது.

தலைநகர் புதுடெல்லியில் இருந்து விடியோ மூலமாக ஜி20 உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அவரது உரை விவரம்:

ஆப்கானிஸ்தானத்தில் மிகவும் சிக்கலான சூழ்நிலை நிலவுகிறது என்பது உண்மைதான் ஆப்கானிஸ்தானுக்கு என்று தொடர்ச்சியாக மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் தேவை அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் அரசும் யாரையும் விளக்காமல் அனைவருக்கும் இடம் அளிக்கும் அரசை நிறுவி செயல்பட வேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் அரசு பல துறைகளில் கணிசமான முன்னேற்றம் பெற்றுள்ளது இந்த முன்னேற்றத்தின் பலன்கள் வீணாகி விடக்கூடாது என்று இந்திய பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

காலிஸ்தான் தீவிரவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் ஊற்றுக்கண்ணாக அமைந்துவிடக்கூடாது அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் மக்களின் அவசியம் இதற்கு தொடர்ச்சியாக சர்வதேச மனிதாபிமான உதவி கிடைக்க வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார்.

ஆப்கானிஸ்தானத்தில் 500க்கும் மேற்பட்ட வளர்ச்சித் திட்டங்களில் இந்தியா பணியாற்றி இருக்கிறது என்று இத்தாலியில் பேசும்பொழுது தெரிவித்தது உண்மைதான் ஆப்கானிஸ்தான் இந்தியாவுக்கும் இடையிலான நல்ல மனிதர்களுக்கு இடையே உள்ள தொடர்பு இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் பெரும் வெற்றி பெற்றுள்ளது இந்த வெற்றியில் வீணாகி விடக்கூடாது இதைத்தொடர்ந்து மக்கள் வாழ உதவ வேண்டும் என்ன இந்திய பிரதமர் மோடி குறிப்பிட்டார். ஆப்கானிஸ்தானத்தில் உள்ள தலிபான் அரசை இன்னும் இந்திய அரசு அங்கீகரிக்கவில்லை. பேச்சுவார்த்தைகளும் துவக்கப்படவில்லை .அதனால் எதனையும் உறுதி செய்யாமல் விடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் மோடி உரையாற்றினார்.