மனித உரிமைப் பிரச்சனைகளை அரசியல் கண்ணாடி மூலம் பார்க்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை

பதிவு செய்த நாள் : 12 அக்டோபர் 2021 18:40

புதுடெல்லி, அக்டோபர் 12,

மனித உரிமைப் பிரச்சனைகளை அரசியல் கண்ணாடி மூலம் பார்க்கக் கூடாது. மனித உரிமைகள் நேரம் பட்டிருப்பதாக பூதாகரமாகத் தோன்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி என்று எச்சரித்தார்.

தேசிய மனித உரிமைகள் கமிஷன் துவக்கப்பட்ட 28வது ஆண்டு தினத்தை ஒட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது தெரிவித்தார்.

மனித உரிமைகள் தொடர்பான விளக்கங்களை தேர்ந்தெடுக்கக் கூடாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியாவைப் பற்றிய கவுரவம் குறையும் வகையில் வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

சிலர் மனித உரிமைகள் பிரச்சனை சொந்த கண்ணோட்டம் அடிப்படையில் பார்க்கிறார்கள் அவ்வாறு பார்க்கும் பொழுது சில சூழ்நிலைகளில் மனித உரிமைகள் மீறப்பட்டு இருப்பதாகத் தோன்றும் வேறு சில சந்தர்ப்பங்களில் தெரியாது இந்த மாதிரி சேர்ந்த முறையில் மனித உரிமைகளை மறுமுறை ஜனநாயகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஜனநாயகத்தில் உரிமைகள் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கடமைகளும் முக்கியம் அதனால் அவை தனித்தனியாக பிரித்து பார்க்க கூடாது.

ஏழைகளின் கவுரவம் காக்கப்பட வேண்டும் என்று அரசு செயல்பட்டது ஏனென்றால் மனித உரிமைகள் ஏழைகளின் கவுரவத்துக்கு நெருக்கமான தொடர்புடையது ஆகும் அதனால் தான் ஸ்வாச் பாரத் மிஷன் கட்டப்பட்டன ஜன்தன் யோஜனா திட்டத்தின் வங்கிக் கணக்குகளை மக்களுக்குத் துவக்கி தரப்பட்டது அது தவிர பெண்களுக்கு ஆண்டாண்டு காலமாக இழைக்கப்பட்டு வந்த அநீதிகளைத் தடுக்கவும் நடவடிக்கை எடுத்தது முஸ்லிம் பெண்கள்முத்தலாக் சட்டத்திற்கு எதிராக சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்கள் அவர்களுக்கு புதிய உரிமையை இந்திய அரசு வழங்கியது தலாக் சட்டத்துக்கு எதிராக இந்திய அரசு சட்டம் இயற்றியது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

ஏழை மக்கள் பிற்பட்ட வகுப்பினர் நலிந்த பிரிவினர் அவர்களின் நலனுக்காக மோடி அரசு ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் பாடுபட்டது அதற்குக் காரணம் அவர்களின் மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பதுதான் என்று இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டார்.

 மனித உரிமை கமிஷன் கடந்த 28 ஆண்டுகளாக இந்திய மக்களுக்கு மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை வழங்கி வந்துள்ளது என்று அமித்ஷா பாராட்டுத் தெரிவித்தார்.

மனித உரிமைகள் கமிஷன் துவக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை 20 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு கண்டிருக்கிறது மேலும் மனித உரிமைகள் பறிக்கப்பட்ட பல கோடி பேருக்கு ரூ 250 கோடி இழப்பீடாக வழங்கியுள்ளது என்றும் அமித் ஷா குறிப்பிட்டார்.