தோகாவில் அமெரிக்க அதிகாரிகள் - தலிபான் பிரதிநிதிகள் பேச்சு துவங்கியது

பதிவு செய்த நாள் : 09 அக்டோபர் 2021 19:46

இஸ்லாமாபாத், அக்டோபர் 9,

கத்தார் நாட்டின் தலைநகரமாகிய ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசின் பிரதிநிதிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் குழு சனிக்கிழமையன்று தங்கள் இரண்டு நாள் பேச்சுவார்த்தையைத் துவக்கினார்கள்.

அமெரிக்க அதிகாரிகள் குழுவில் வெளியுறவுத்துறை வெளிநாடுகளுக்கான உதவி துறை, அமெரிக்க புலனாய்வுத்துறை அதிகாரிகள் இடம் பெறுகின்றார்கள்.

தலிபான் அரசின் மூத்த பிரதிநிதிகள் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் பங்கு கொள்கின்றனர்.

இந்தத் தகவலை ஐக்கிய நாடுகள் சபை ஆப்கானிஸ்தான் அரசின் பிரதிநிதியாக பரிந்துரைக்கப்பட்ட சுவையில் சாஹீன் உறுதி செய்தார்.

சா ஹின் தற்பொழுது தோகாவில் இருக்கிறார்.

அமெரிக்க அதிகாரிகளுடன் நடக்கும் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்வதற்காக ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி பல மூத்த அதிகாரிகளுடன் காபுல் நகரில் இருந்து தோகாவுக்கு புறப்பட்டனர் என தகவல் கூறப்பட்டது.

இந்தக் குழுவினர் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று நேரடியாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் வெளிநாடுகளின் தூதுக் குழுக்களுடன் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார் என பொதுவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசுக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து அமெரிக்க அரசு ஏதேனும் முடிவுக்கு வந்திருக்கிறதா என்று அமெரிக்க அதிகாரிகளிடம் ராய்ட்டர் செய்தி நிறுவன செய்தியாளர் கேட்டார்.

தான் கொடுத்த வாக்குறுதிகளை தலிபான் அரசு எவ்வாறு நிறைவேற்றுகிறது என்பதை பொருத்து அங்கீகாரம் குறித்து பரிசீலிக்கப்படும் என அமெரிக்க அதிகாரி பதில் அளித்தார்.