ரியல் எஸ்டேட் தொழிலில் சீர்திருத்தம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

பதிவு செய்த நாள் : 04 அக்டோபர் 2021 15:34

புதுடெல்லி, அக்டோபர் 4,

ரியல் எஸ்டேட் தொழிலில் வீடு வாங்குவோர் விற்போர் இடையிலான ஆவண பரிவர்த்தனைகளை சீர்திருத்தம் செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்தியாயா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அஸ்வினி குமார் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் விகாஸ் சிங், மேனகா குருசாமி மற்றும் அனுபவம் லால் தாஸ் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார்கள்.

2016ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் தொழிலைக் காப்பதற்கு என்று ரியல் எஸ்டேட் ரெகுலேட்டரி அத்தாரிட்டி சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தின்படி அரசுக்கு ஆலோசனைகள் கூறுவதற்காக மத்திய ஆலோசனை கவுன்சில் ஒன்று நிறுவப்பட வேண்டும் இது சட்டத்தை முதல் பிரிவு முன்வைக்கும் பரிந்துரையாகும்.

சட்டத்தில் இரண்டாவது பிரிவு ரியல் எஸ்டேட் ரெகுலேட்டரி சட்டத்தை அமல் செய்வது தொடர்பானதாகும்.

மத்திய ஆலோசனை கவுன்சில்  கொள்கை ரீதியான மாற்றங்களை மத்திய மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

வீடுகளைக் கட்டி விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கும் வீடுகளை வாங்கும் பொது மக்களுக்கும் இடையில் ஒளிவு மறைவு அற்ற நடவடிக்கைகளை உறுதி செய்வது தொடர்பான பரிந்துரைகளை மத்திய ஆலோசனைக் கவுன்சில் முன்வைக்கலாம் மத்திய ஆலோசனைக் கவுன்சில் வீடுகளை வாங்குவோர்  ஏமாற்றப்படாமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் பரிந்துரை வழங்கலாம்.

வீடுகளை வாங்குவோர் மோசடிக்கு ஆளாகாமல் தடுப்பதற்கான விதிகளை தயாரித்து வழங்க மத்திய ஆலோசனைக் கவுன்சில் அதிகாரம் அளிக்கிறது.

வீடுகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கும் வாங்குவோருக்கு மிடையே ஒப்பந்தம் செய்து கொள்வது குறித்து இந்தியா முழுமைக்கும் பின்பற்ற வேண்டிய பொதுவான வரைவு ஒப்பந்தம் எதுவும் வெளியிடப்படவில்லை.

சட்டப்படியான வரைவு ஒப்பந்தம் வெளியிடப்படாத காரணத்தினால் வீடுகளை வாங்கும் முறை மாற்றப்படுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.

வீடுகளுக்கு முன் பணம் செலுத்தியவர்கள் உரிய நேரத்தில் வீடுகளை ஒதிக்கீடு செய்யப்படுவதில்லை காலதாமதம் ஆகிவிட்டது அதனால் வாங்குவோர் ஏராளமான பொருள் செலவு ஆகிறது இத்தகைய சூழ்நிலையில் வீடுகளை விற்பனை செய்வோர், வீடுகளை வாங்குவோருக்கு இழப்பீடு வழங்க மத்திய ஆலோசனைக் கவுன்சில் உரிய விதிகளை வகுக்கலாம்.

இந்தியாவில் உள்ள ஒரு மாநில அரசு கூட இந்த சட்டத்தின் கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் வீடுகளை வாங்கும் போது கடுமையான இழப்புக்களுக்கு ஆளாகிறார்கள்.

இவ்வாறு மனுதாரர் உபாத்தியாயா விவரங்களைத் தந்துள்ளார்.

இந்த மனு பற்றிய விசாரணை நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் நாகரத்னா அடங்கிய அமர்வு முன்பு வந்தது.

மனுதாரர் மிகவும் முக்கியமான பிரச்சனை ஒன்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். சாதாரண மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு சேமித்த தொகைகளை வீடு வாங்கும் முயற்சியில் இழந்து, எல்லைகளாக தெருவில் நிற்கிறார்கள்.

மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்த தொகை, சிக்கனமாக இருந்து சேமித்த தொகை சதி வேலைகள் திட்டங்கள் காரணமாக பொதுமக்கள் கையிலிருந்து பறிக்கப்படுகிறது.

மனுவில் எழுப்பப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து பதிலளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

.