சமந்தாவுடன் விவாகரத்து குறித்து மனதிறந்த நாகசைதன்யா..!

25 செப்டம்பர் 2021, 06:08 PM

நம்ம தமிழ் பெண்ணான சமந்தா தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் நிறைய படங்கள் நடித்து அங்கும் முன்னணி நடிகைக்கான அங்கிகாரத்தை பெற்றார். இதனிடையே தெலுங்கில் திரைப்படம் நடிக்கும் பொழுது நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 

திருமணத்திற்கு பிறகும் இரு மொழி திரைப்படங்களிலும் கவணம் செலுத்திவரும் இவரின் திருமண வாழ்க்கை குறித்து சமுக வலைதளங்களில் பல வதந்திகள் பரவி வருகிறது. இதில் நடிகை சமந்தாவுக்கும், அவரது கணவர் நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு, இருவரும் பிரியப் போகிறார்கள் என்ற வதந்தி வெகுநாட்களாகவே உலவுகிறது. சமீபத்தில் திருப்பதி வந்த சமந்தாவிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, பதில் அளிக்காமல் கோபப்பட்டார். 

இந்த விவகாரம் குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்த நாகசைதன்யா, சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது: “நான் சிறுவயதில் இருந்தே திரைத்துறை வாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதை பார்த்து வளர்த்தவன். இந்த பழக்கம் என்னுடைய தாய், தந்தையிடம் இருந்து எனக்கு வந்தது. சமந்தாவுடனான விவாகரத்து என்ற செய்தி பரவி வருவது, எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு செய்தியை மறக்கடிக்க இன்னொரு செய்தி உடனே வந்து விடுகிறது. இன்று ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டால், நாளை இன்னொரு செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்படும், முந்தைய நாள் செய்திகள் மறந்து விடுகின்றன. இந்த புரிதல் எனக்குள் வந்தவுடன், நானும் இதுகுறித்து கவலைப்படுவதை நிறுத்தி விட்டேன்” என்று கூறியுள்ளார்.