சுந்தர். சி நடிப்பில் உருவாகவிருக்கும் ‘தலைநகரம் 2’...

23 செப்டம்பர் 2021, 07:47 PM

கோலிவுட் கமர்ஷியல் இயக்குனர்களில் முக்கியமானவர் சுந்தர்.சி. பல கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்துள்ள இவர் தமிழ் சினிமாவில் ஹீரோவாக எண்ட்ரியானது சுராஜ் இயக்கத்தில் வெளியான ‘தலைநகரம்’ படத்தில் தான். வடிவேலுவின் நாய் சேகர் காமெடி அதிரடி சண்டைக் காட்சிகள் என கமர்ஷியல் ஃபார்முலாவில் வெளியான இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது.\

 அதன் பின் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் தொடர்ந்து இருந்து வரும் சுந்தர். சி தற்போது தனது  ‘அரண்மனை 3’ படத்தின் வேலைகளை முடித்துவிட்டு நடிப்பில் கவணம் செலுத்து துவங்கிவிட்டார்.

 கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘இருட்டு’ படத்தை இயக்கிய வி..இசட்.துரை இயக்கத்தில் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘தலைநகரம் 2’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் வேலைகளை இன்று பூஜையுடன் துவங்கியுள்ளனர். விரைவில் படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.