பெட்ரோல் டீசல் விலை உயர்வு - மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் கருப்புக்கொடிஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நாள் : 20 செப்டம்பர் 2021 10:15

சென்னை

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கருப்புக்கொடி ஏந்தி இன்று (20-9-2021) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து திமுக கூட்டணிக்கட்சிகளின் கறுப்புக்கொடி போராட்டம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.

3 வேளாண் விரோத சட்டங்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையுயர்வு, வேலையின்மை, பொருளாதார வீழ்ச்சி, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது ஆகியவற்றை எதிர்த்து

சென்னை - தேனாம்பேட்டை அன்பகம் அருகே திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி, அண்ணாநகரில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தி.நகர் சிவாஜி இல்லம் அருகே கம்யூனிஸ்ட் தலைவர்கள், வைத்தியராமன் தெருவில் மார்க்சிஸ்ட் தலைவர்கள், திமுக கூட்டணி சார்பில் கட்சிப்பிரமுகர்கள் வீடுகளில் கறுப்புக்கொடியேந்தி, ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இந்தப் போராட்டத்தில் மாவட்ட செயலாளர்களாக இருக்கும் அமைச்சர்களும் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.

சென்னை மகாராணி கல்லூரி அருகே திருவொற்றியூர் நெடுஞ்சாலை திமுக வழக்கறிஞர் சார்பில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் மருதகணேஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 

ஏராளமான வழக்கறிஞர்கள் திமுக மற்றும் கூட்டணிக்கட்சியினர் கலந்து கொண்டனர்.