திருவொற்றியூரில் தனியார் மருத்துவமனை சார்பில் இலவச கண்புரை நோய், கொரோனா நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டது

பதிவு செய்த நாள் : 19 செப்டம்பர் 2021 18:39

சென்னை

திருவொற்றியூர் தேரடி சன்னதி தெருவில் அபெக்ஸ் கிலவிரா கிரீன் மில்க் கான்செப்ட். MN கண் மருத்துவமனை மற்றும் செல்வி மருத்துவ சேவை மையம் சார்பில் இலவச கண் புரை நோய் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை,  கொரானா நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரிக்க மருந்துகள் வழங்கப்பட்டது.

திருவொற்றியூர் சுகம் மருத்துவமனையில் இன்று இலவசமாக தடுப்பூசி போடப்பட்டது, பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி வருவதாக மருத்துவமனையின் மேலாண் இயக்குனர் டாக்டர் சத்யகுமார் தெரிவித்தார். திருவொற்றியூரில் இலவச மருத்துவ முகாம் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோமார்பில்ட்டி என்றழைக்கப்படும் இணை நோய்களின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனை தவிர்க்கும் வகையில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் வகையில் திருவொற்றியூர் தேரடி அருகே செல்வி மருத்துவசேவை மையம் அபெக்ஸ் கிளேவாரா கீரின் மில்க் கான்செப்ட் நிறுவனம் மற்றும் எம்என் கண் மருத்துவமனை இணைந்து மருத்துவ சிகிச்சை முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். செல்வி மருத்துவ சேவை மையத்தின் மேலாண் இயக்குனர் டாக்டர் ராஜ்குமார் தலைமையிலான இந்த சிறப்பு சிகிச்சை முகாமில் வடசென்னை திமுக எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி , திருவொற்றியூர் தொகுதி எம்எல்ஏ கே.பி.சங்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் URLITHO  எனும் சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக சம்பந்தமான மருந்து அறிமுகம் செய்யப்பட்டது. வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி பொதுமக்களுக்கு இம்மருந்தை அறிமுகம் செய்தார்.

முன்னாள் துணை ஆட்சியர் லைலா பீவி முன்னிலையில் நடைபெற்ற இந்த முகாமி்ல் கண்புரை சிகிச்சை, நீரிழிவு நோய் ரத்த அழுத்தம் மற்றும் கொரானோ நோய் குறித்து சிகிசசைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன.

 சுமார் நுாற்றுக்கும் மேற்பட்ட இந்த முகாமில் பங்கேற்று பயன் பெற்றனர்.

நிகழ்ச்சியில் திமுக பகுதி செயலாளர் தி.மு. தனியரசு, முன்னாள் மாமன்ற உறுப்பினர் எம்.வி. குமார், பெக்ஸ் பொது மேலாளர் ஸ்ரீதர், சந்தை விற்பனை மேலாளர் ராகவன் மண்டல மேலாளர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியை திருவொற்றியூர் பாஸ்கர் தொகுத்து வழங்கினார்.