பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரலாமா? வெள்ளியன்று பரிசீலனை

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2021 19:16

புது டெல்லி, செப்டம்பர் 14,

பொருள்கள் மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டம் செப்டம்பர் 17ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் பெட்ரோல், டீசல், எல்பிஜி ஆகிய எரிவாயு பொருள்களை ஜிஎஸ்டி வரி அமைத்துக் கொண்டு வரலாமா என்று சிஎஸ்சி கவுன்சில் பரிசீலிக்க உள்ளது.

கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு ஒன்றின் மீதான விசாரணையின்போது கேரள மாநில உயர்நீதிமன்றம் பெட்ரோல் டீசல் ஆகிய பொருள்களை ஜிஎஸ்டி வரி அமைப்பின் கீழ் கொண்டு வருவது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

மாநில உயர்நீதிமன்ற கோரிக்கையின் அடிப்படையில் ஜிஎஸ்டி கவுன்சில் பெட்ரோல் டீசல் ஆகிய பொருள்களை ஜிஎஸ்டி வரி அமைத்துக் கொண்டு வரலாமா என்று பரிசீலிக்கும் என தெரிகிறது.

மத்திய அரசு மாநில அரசு பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீது தனித்தனியாக விதிக்கும் வரி காரணமாக அவற்றின் விலை உயர்ந்த பட்ச அளவை எட்டுகிறது இதுதவிர எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. சர்வதேச சந்தை அடிப்படையில் அந்த நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை தினந்தோறும் மாற்றியமைக்கின்றன இந்த சூழ்நிலை காரணமாக பெட்ரோல் டீசலின் விலை நிரந்தரமாக இல்லாமல் இருப்பது  உற்பத்தியை கடுமையாக பாதிக்கிறது.

போக்குவரத்து எரிபொருளாக பெட்ரோல் டீசலை பயன்படுத்தும் நடுத்தர வகுப்பு மக்களும் மிகவும் அவதிக்கு ஆளாகிறார்கள் இந்த சூழ்நிலையில் ஜிஎஸ்டி வரி அமைப்பின் கீழ் பெற்றோல் டீசல் ஆகியவற்றைக் கொண்டு வரும்பொழுது மத்திய அரசும் மாநில அரசும் தங்கள் வரி விதிப்பை குறைத்துக் கொள்ள முன் வரவேண்டும் இல்லாவிட்டால் இப்பொழுது விதிக்கப்படும் வரி அளவின் அடிப்படையில் ஜிஎஸ்டி வரி சமமாக நிர்ணயிக்கப்பட்ட மக்களுக்கு எந்த பயனும் கிட்டாது.

மத்திய அரசும் மாநில அரசும் தங்கள் வரி வருமானத்தை குறைத்துக் கொள்ள முன் வராவிட்டால் பொதுமக்கள் மீதான வரிச்சுமை எந்த வகையிலும் குறையப்போவதில்லை பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டி வரி அமைப்பின் கீழ் வந்தாலும் வராவிட்டாலும் மக்களுக்கு வழிசமைக்கும் குறையாது என்றார் ஜிஎஸ்டி அமைப்பின் கீழ் ஏன் பெட்ரோல் டீசலை கொண்டுவரவேண்டும் என்ற கேள்வியை மக்கள் எழுப்பக் கூடும்.

மத்திய அரசு தன் பங்குக்கு பெட்ரோல் டீசல் மீது வரியை உயர்த்தும் அதிகாரத்தை வைத்துக் கொண்டு மாநில அரசுகளின் வரி விதிக்கும் அதிகாரத்தை மட்டும் சிஎஸ்சி காரணம் காட்டி பிடுங்கிக் கொண்டால் மாநில அரசுகளின் நிதி அதிகாரம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் இந்த அனைத்து பிரச்சனைகளும் சமச்சீராக கருதக் கூடிய நிலையில் ஜிஎஸ்டி வரி அமையுமானால் அது சிறப்பாக இருக்கும்.

கடந்த 20 மாதங்களாக ஜிஎஸ்டி கவுன்சில் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடந்து வந்துள்ளது கடைசியாக 2019 டிசம்பர் 18ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மாநில மத்திய நிதி அமைச்சர்கள் நேரடியாக பங்கேற்கும் வகையில் அமைந்தது அதற்குப் பிறகு வரும் செப்டம்பர் 17ஆம் தேதி லக்னோ நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தகுந்தது.

 இந்தக் கூட்டத்தில் கொரானோ சிகிச்சை பொருள்களுக்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை சலுகை ஜி.எஸ்.டி. வரி முறை அமலில் உள்ளது.

அந்த சலுகை வரிமுறையை நீட்டிக்க வேண்டுமா என்பது குறித்தும் லக்னோவில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட வாய்ப்பு உள்ளது.