கல்வியை கூட்டுப் பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2021 16:33


கல்வியை கூட்டுப் பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

சென்னை, செப்டம்பர்14,

கல்வியை மாநில அரசு பட்டியலில் இருந்து மத்திய மாநில அரசுகளின் கூட்டு பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. மத்திய மாநில அரசுகளுக்கு மனுவுக்கு 8 வாரங்களுக்குள்பதில் அளிக்கும்படி கோரும் நோட்டீஸ்களை அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 10 வாரங்களுக்குப் பிறகு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


 இந்த மனுவை அறம் செய்ய விரும்பு  அறக்கட்டளை  தாக்கல் செய்துள்ளது அந்த அறக்கட்டளையின் பிரதிநிதியாக ஆயிரம் விளக்கு தொகுதி மருத்துவர் எழிலன் நாகநாதன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

 அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள்ஜி.எம்.அக்பர் அலி, சிடி செல்வம், இந்து பத்திரிக்கையில் வாசகர் ஆசிரியர் பன்னீர்செல்வமன் ஆகியோர் அறக்கட்டளை உறுப்பினர்களாக உள்ளனர் அறக்கட்டளையின் அனைத்து உறுப்பினர்களும் இந்த வழக்கில் பிரதிநிதியாக தன்னை ஏகமனதாக அங்கீகாரம் அளித்து மனுச் செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் எழிலன் நாகநாதன்  தாக்கல் செய்துள்ள மனுவில் விவரம்:

 இந்தியாவை பிரிட்டிஷார் ஆண்ட காலத்தில்கூட கல்வி என்பது மாநிலங்களின் அதிகாரத்திற்கு விடப்பட்டிருந்தது பின்னர் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு கல்வி மாநிலங்களில் அதிகாரப் பட்டியலில்  சேர்க்கப்பட்டது.

 அரசியல் நிர்ணய சபை விவாதங்களில் மாநிலங்களின் அதிகாரப் பட்டியலில் கல்வி கட்டாயம் இருக்க வேண்டும் அதை மத்திய அரசு பட்டியலுக்கு அல்லது மத்திய அரசு பொறுப்பிற்கு மாற்றக்கூடாது என்று பல அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள்  வாதாடி உள்ளனர்.

 கல்விப் பணிகளை நிறைவேற்ற மாநில அரசுக்கு போதுமான நிதி வசதி இல்லாவிட்டாலும் கல்வி அதிகாரத்தை மாநில அரசுகளிடம் இருந்து எடுக்கக்கூடாது மாநில அரசுகளுக்கு தேவையான நிதி ஆதாரத்தை வழங்க வேண்டும் என்றும் அரசியல் நிர்ணய சபையில்  கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.


 1976ஆம் ஆண்டு அரசியல் சட்டத் திருத்தம் மூலமாக மாநிலங்களில் பொறுப்பில் இருந்த க்ல்வி மத்திய மாநிலங்களின் கூட்டுப்பொறுப்புக்கு மாற்றப்பட்டது அதைத் தொடர்ந்து மத்திய அரசு பல சட்டங்களை இயற்றியது. அதனால் கல்வித்துறை இப்பொழுது முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது அதனால் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே கல்வித்துறையில் பராமரிக்கப்படவேண்டிய அதிகாரச் சமநிலை கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டது.

 பள்ளி ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோருக்கான குறைந்தபட்ச தகுதிகளை நிர்ணயம் செய்யப்படும் சட்டம் 1993 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அது தவிர 2020 ஆம் ஆண்டில் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வகுத்து நிறைவேற்றத் தொடங்கியது. புதிய கல்விக் கொள்கையை நிறைவேற்றும் நிலையில் மாநிலங்களில் சுயாட்சி உரிமை கல்வித்துறையில் முழுக்க மத்திய அரசினால் எடுக்கப்பட்டு விடும் இதனால் கூட்டமைப்பு முறை கடுமையாக பாதிக்கப்படும்.

புதிய கல்விக் கொள்கை பல மத்திய ஏஜென்சிகள் உருவாக்க வகை செய்கிறது இந்த மத்திய ஏஜென்சிகள் கல்வித்துறையின் எல்லா அம்சங்களையும் நாடு முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடும். புதிய கல்விக் கொள்கை அமல் செய்யப்படும் நிலையில் கல்வி  முழுக்க முறை மத்திய கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.

 எனவே 1976ஆம் ஆண்டு அரசியல் சட்டத்திருத்தத்தின் 57 ஆவது பிரிவை ரத்து செய்து மாநில அரசுகளுக்கு கல்வி துறையில் உள்ள முழு உரிமையை மீண்டும் உறுதி செய்ய கேட்டுக்கொள்கிறேன் என ஆயிரம்விளக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன் தனது மனுவில் கோரியுள்ளார்.

மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் என்னால் இளங்கோ ஆஜராகி வாதாடினார் அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர் சங்கரநாராயணன் மனுதாரரின் மனு பற்றி பேசும்பொழுது கல்வியை மாநில அரசின் தனி பொறுப்பு இருக்கிறது துப்பு கொடுத்தால் அரசியல் சட்டத்திருத்தம் மாறுகிறதே ஒழிய  மத்திய அரசின் பொறுப்புக்கு மாற்றவில்லை என்று தெரிவித்தார் மனுதாரரின் மனுவை பரிசீலித்த பிறகு விரிவான பதில் அளிக்க அனுமதிக்கும்படி நீதிபதிகளை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர் சங்கரநாராயணன் கேட்டுக்கொண்டார்.

 சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனர் இந்த மனுவில் மாநில அரசை ஒருபிரதிவாதியாக சேர்க்கும்படி நீதிபதிகள் ஆணையிட்டனர் மத்திய அரசும் மாநில அரசும் மனுதாரரின் மனு குறித்த தங்கள் கருத்துக்களை 8 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மனு மீதான அடுத்த விசாரணையை தேதி 10 வாரங்களுக்குப் பின்னர் அமையும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.