விவசாயிகள் போராட்டம் எதிரொலி: 4 மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2021 15:04

புது டெல்லி, செப்டம்பர் 14,

டெல்லி எல்லையில் போராட்டம் காரணமாக தொழில் நிறுவனங்கள் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக தேசிய மனித உரிமை கமிஷன் பல புகார்கள் வந்துள்ளன இது குறித்து உங்கள் கருத்து என்ன என்று தெரிவிக்கும்படி டெல்லி டெல்லி உத்தரபிரதேசம் அரியானா ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகளின் தலைமைச் செயலாளருக்கு தேசிய மனித உரிமைகள் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீசில் பிரதிகள் 4 மாநிலங்களில் காவல்துறைத் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

9000 தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இந்த நான்கு மாநிலங்களிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது அதனால் தினமும் வேலைக்கு செல்வோர் நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் மூத்த குடிமக்கள். சாலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் குறிப்பிட்ட இடத்தை அடைவதற்கு சுற்றுப் பாதையில் செல்ல வேண்டி இருப்பதால் நீண்ட தூர பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றும் புகார்கள் வந்து இருப்பதாக கூறப்படுகிறது.

போராடுகிற விவசாயிகள், கொரானா வைரஸ் தொற்று  தொடர்பான கட்டுப்பாடுகளை போராட்டக் களத்தில் பின்பற்றவில்லை என்றும் கூறப்படுகிறது.

அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

அமைதியாக போராடுவதற்கு மக்களுக்கு உள்ள உரிமையையும் மனித உரிமைகள் கமிஷன் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இந்த புகார்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை களையும் அவற்றின் விவரங்களையும் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் மனித உரிமைகள் கமிஷனுக்கு தெரிவிக்கும்படி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் பொருளாதார வளர்ச்சிக்கான நிறுவனத்திற்கும் (இன்ஸ்டிடுயட் ஆஃப் எகனாமிக் குரோத்)

விவசாயிகள் போராட்டம் பாதிப்பு எந்த வகையில் தொழில் நிறுவனங்கள் வர்த்தக நடவடிக்கைகள் போக்குவரத்து நுகர்வோர் ஆகியோரை பாதித்து உள்ளது என்று ஆய்வு செய்து அக்டோபர் 10ஆம் தேதிக்குள் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

போராட்டக் களங்களில் கொரானா கட்டுப்பாடுகள் மீறப்படுவதாக கூறப்படுகிற புகார்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தேசிய பேரழிவு நிர்வாக ஆணையம் மத்திய உள்துறை அமைச்சகம் மத்திய சுகாதார அமைச்சகம் ஆகியவற்றுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளன என்று கூறப்படுகிறது.

விவசாயிகள் போராட்டம் நடக்கிற இடத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக வந்த ஆர்வலர் ஒருவர் கற்பழிக்கப் பட்டதாக கூறப்படுகிறது குறித்து இழப்பீடு வழங்கப்பட்டது என்று அக்டோபர் 10ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி ஜாஜ்ஜார் மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கும் தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

டெல்லி பல்கலைக்கழகத்தில் சமூக சேவை பள்ளிக் கூடத்திற்கும் விவசாயிகள் போராட்டத்தின் காரணமாக மக்களின் வாழ்க்கைமுறை மூத்த குடி மக்களின் வாழ்க்கைமுறை நோயாளிகள் ஆகியோர் எந்த வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கை தரும்படி கூறப்பட்டுள்ளது.