பேட்மின்டன் மற்றொரு பிரிவிலும் இந்தியாவுக்கு தங்கம்

பதிவு செய்த நாள் : 05 செப்டம்பர் 2021 15:37

டோக்கியோ, செப்டம்பர் 5,

டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக்ஸ் பேட்மின்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு எஸ்எச் 6 போட்டியில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் தங்கப்பதக்கம் வென்றார்.

22 வயதாகும் கிருஷ்ணா நகர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். பேட்மின்டன் விளையாட்டு வீரர்களில் உலகின் இரண்டாம் நிலை தகுதியைப் பெற்றவர்.

ஹாங்காங்கை சேர்ந்த சூ மான் காய் 3 ஆட்டங்களில் 2 ல் கிருஷ்ணா நாகரிடம் தோற்றுப் போனார்.

2020 பாராலிம்பிக் போட்டிகளில் முதல்முறையாக பேட்மின்டன் சேர்க்கப்பட்டது.

முதல் ஆண்டிலேயே இந்தியா இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றது.

பகத் முதல் தங்கப் பதக்கத்தையும் கிருஷ்ணா நாகர் 2-வது தங்கப் பதக்கத்தையும் வென்றனர்.

பேட்மின்டன் போட்டியில் தங்கப் பதக்கம் ,வெள்ளிப்பதக்கம் ஆகியவற்றை வென்ற இந்திய வீரர்களை இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியாவில் மற்ற அரசியல் தலைவர்களும் பாராட்டி உள்ளனர்.

பாராலிம்பிக் போட்டிகளின் இறுதி நாளான இன்று வரை இந்தியா ஐந்து தங்கப்பதக்கங்கள் எட்டு வெள்ளிப் பதக்கங்கள் 6 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா பெற்ற மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 19.