பேட்மின்டன் ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் பிரமோத் தங்கம் வெனறார்

பதிவு செய்த நாள் : 04 செப்டம்பர் 2021 18:44

டோக்கியோ, செப்டம்பர் 4,

டோக்கியோ பராலிம்பிக்ஸ் பேட்மின்டன் ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் பிரமோத் பகத்  தங்கப்பதக்கம் வென்றார்.

மற்றொரு இந்திய பேட்மின்டன் விளையாட்டு வீரர் மனோஜ் சர்க்கார் வெண்கலப் பதக்கம் வென்றார்.

பேட்மின்டன்  விளையாட்டில் ஆட்டக்காரரான முதல் நிலை ஆட்டக்காரரான பிரமோத் பிரிட்டனைச் சேர்ந்த டேனியல் பெத்தேலை வென்று மீண்டும் தங்கப்பதக்கம் பெற்றார்.

வெண்கலப் பதக்கம் வென்ற மனோஜ் சர்க்காருக்கு இளம் வயதில் போலியோ காரணமாக கால் பாதிக்கப்பட்டது.

2016ஆம் ஆண்டு பீஜிங்கில் நடந்த போட்டிகளில் மனோஜ் சர்க்கார் தங்கப்பதக்கம் வென்றார்.