பாராலிம்பிக்ஸ் பேட்மின்டன் போட்டி: பகத் அரை இறுதிப்போட்டியில் நுழைகிறார்

பதிவு செய்த நாள் : 02 செப்டம்பர் 2021 17:06

டோக்கியோ, செப்டம்பர் 2,

டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டிகளில் பேட்மின்டன் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பிரமோத் பகத் ஒற்றையர் பிரிவில் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

ஒற்றையர் போட்டி தவிர மிக்ஸட் டபுள்ஸ் போட்டியிலும் இந்தியாவைச் சேர்ந்த பிரமோத் பகத் மற்றும் பலாக் கோலியும் ஆட உள்ளனர். அவர்கள் சிரிப்போங் டீமரம் மற்றும் நிப்பாடா சாயேன் சுபா ஜோடியை எதிர்த்து ஆட உள்ளனர்.

இந்தியாவிலிருந்து பேட்மின்டன் போட்டிக்கு சென்றுள்ள சுகாஷ் யத்திராஜ், தருண் தில்லான், கிருஷ்ண நாகர் ஆகியோரும் ஒற்றையர்போட்டிகளில் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளனர்.