டோக்கியோ பாராலிம்பிக்ஸ் துப்பாக்கி சுடும் போட்டியில் சிங்ராஜ் அதானா வெண்கல பதக்கம் வென்றார்

பதிவு செய்த நாள் : 31 ஆகஸ்ட் 2021 16:11

டோக்கியோ ஆகஸ்ட் 31

10 மீட்டர் ஏர் பிஸ்டல் சுடும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த  சிங்ராஜ் அதானா செவ்வாய்க்கிழமை வெண்கலப்பதக்கம் வென்றார்.

10 மீட்டர் ஏர் பிஸ்டல் சுடும் போட்டியில் சிங்கராஜ் மொத்தம் 216 .8 பெற்றார்.

அவர் பெற்ற புள்ளிகள் அடிப்படையில் அவருக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது.

சீனாவைச் சேர்ந்த சாவோ யாங் 237.9 பாயின்டுகள் பெற்று  தங்கம் வென்றார்.

மற்றொரு சீனரான ஹுவாங் ஜிங் 237.5 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.