பாராலிம்பிக்ஸ் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அவனி லெக்காரா

பதிவு செய்த நாள் : 30 ஆகஸ்ட் 2021 11:25

டோக்கியோ, ஆகஸ்ட் 30,

டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக்ஸ் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் பெண்மணி அவர்.

19 வயதான அவனி பெற்ற மொத்த புள்ளிகள் 249.6.

இதுவே ஏர் ரைபிள் போட்டியில் உலக ரெக்கார்ட் ஆகும்.

பரலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நாலாவது இந்திய விளையாட்டு வீரர் அவனி.

1972ஆம் ஆண்டு நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார் முரளி காந்த் பெட் கர்.

 2004 ஆம் ஆண்டு ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றார் தேவேந்திர ஜெய்தாரியா.

20 16ம் ஆம் ஆண்டு உயரம் தாண்டுதலில் தமிழகத்தைச் சேர்ந்த தங்கவேலு மாரியப்பன் தங்கம் வென்றார்.

அந்த வரிசையில் நான்காவதாக 2021 ஆம் ஆண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார் அவனி.