பாராலிம்பிக்க் ஈட்டி எறிதல், வட்டு எறிதல் போட்டியில் வெள்ளி, வெண்கலம் வென்றது இந்தியா

பதிவு செய்த நாள் : 30 ஆகஸ்ட் 2021 10:48

டோக்கியோ

டோக்கியோ பாராலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர்கள் தேவேந்திர ஜஜாரிய், சுந்தர் சிங் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் யோகேஷ் கதூனியா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. பாரா ஓலிம்பிக்ஸ் போட்டியில்  இதுவரை 7 பதக்கங்களை பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.

பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் இதுவரை 1 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது.

ஈட்டி எறிதல் வெள்ளி, வெண்கலப் பதக்கம்

ஈட்டி எறிதல் எஃப்-46 பிரிவில் இந்தியா வீரர்கள் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்றனர்.

இந்தியாவின் தேவேந்திரா 64.35 மீ, சுந்தர் சிங் குர்ஜா 64.01 மீ ஈட்டி எறிந்தனர்.

தேலேந்திரா வெள்ளிப் பதக்கமும், சுந்தர் சிங் குர்ஜார் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

வட்டு எறிதல் வெள்ளி பதக்கம்

வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் யோகேஷ் கதூனியா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

ஆண்கள் வட்டு எறிதல் போட்டியில் டெல்லியைச் சேர்ந்த பிகாம் பட்டதாரி கதுனியா வெண்கலப் பதக்கம் வென்றார்

தங்கப் பதக்கம்

 10 மீட்டர்  ஏர் ரைபிள்பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் பதக்கம் கிடைத்துள்ளது.

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா வீராங்கனை அவானி தங்கம் வென்றார்.