டோக்யோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதல், வட்டு எறிதல் போட்டிகளில் இந்தியா பதக்கங்களை வென்றது

பதிவு செய்த நாள் : 29 ஆகஸ்ட் 2021 19:08

டோக்யோ

இன்று டோக்யோவில் நடைபெற்ற பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

டோக்யோ பாராலிம்பிக்கில் வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் வினோத் குமார் வெண்கலப் பதக்கம் வென்றார்.

டி47 உயரம் தாண்டுதல் பிரிவில் 2.06 மீட்டர் தாண்டி நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

வட்டு எறிதல் போட்டி

டோக்யோ பாராலிம்பிக்கில் வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் வினோத் குமார் வெண்கலம் வென்றார்.

வட்டு எறிதல் போட்டியில் எஃப்52 பிரிவில் 19.91 மீட்டர் தூரம் எறிந்து வினோத்குமார் வெண்கலம் வென்றார்.

இதன்மூலம் இந்தியாவுக்கு ஒரேநாளில் 3 பதக்கங்கள் கிடைத்துள்ளது.

ஏற்கெனவே டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவீனா பட்டேல் வெள்ளி வென்ற நிலையில் தற்போது மேலும் 2 பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்துள்ளன.

டோக்யோ பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா இதுவரை 2 வெள்ளி, 1 வெண்கலம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதலில் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கமும், வினோத்குமார் வெண்கலப் பதக்கமும் வென்றதில் மகிழ்ச்சியடைவதாக பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.