சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆர். – 49 – துரை கருணா

பதிவு செய்த நாள்

01
ஜூலை 2016
23:08

மக்கள் பிரதிநிதிகளின் கடமை!

1979ம் ஆண்டு பிப்­ர­வரி மாதம் தமி­ழக சட்­ட­ச­பை­யில் ஆளு­நர் உரைக்கு நன்றி தெரி­விக்­கும் தீர்­மா­னத்­தின் மீது நடை­பெற்ற விவா­தங்­க­ளுக்கு பதி­ல­ளித்து முத­ல­மைச்­சர் எம்.ஜி.ஆர். பேசி­யது :–

எம்.ஜி.ஆர்.: ஆளு­ந­ரு­டைய உரை­யின்­மீது இந்த மாமன்­றத்­தில் மக்­க­ளு­டைய பிர­தி­நி­தி­க­ளாக பொறுப்­பேற்று, மக்­கள் நல்­வாழ்­விலே அக்­கறை காட்­டு­கின்ற மாபெ­ரும் உறுப்­பி­னர்­கள் அனைத்து கட்­சியை சேர்ந்­த­வர்­க­ளும், தங்­கள் கருத்­துக்­களை எந்த அள­வுக்கு எங்­க­ளுக்கு புரி­ய­வைக்க முடி­யுமோ அந்த அள­வுக்கு அவர்­கள் தங்­கள் ஆற்­ற­லின் விளை­வாக புரி­ய­வைத்­தி­ருக்­கி­றார்­கள். இந்த ஆளு­நர் உரையை பற்றி நான் முத­லி­லேயே ஒன்றை தெரி­விக்க விரும்­பு­கி­றேன்.

நாங்­கள் பத­வி­யேற்ற உட­னேயே வெளி­யிட்ட ஆளு­நர் உரை ஒட்­டு­மொத்­த­மான ஒரு கொள்­கை­யின் பிர­தி­ப­லிப்­பாக அமைக்­கப்­பட்­டது. அடுத்த ஆண்டு நாங்­கள் எதை எதை செய்ய வேண்­டு­மென்று ஆசைப்­பட்­டோமோ அதைப்­பற்றி புள்ளி விவ­ரங்­கள் அல்­லாத நிதி­நிலை அறிக்­கை­யில் சொல்­வதை விட்டு விட்டு மேல் எழுந்­த­வா­ரி­யாக சில­வற்றை நாங்­கள் குறிப்­பிட்­டி­ருந்­தோம்.

இப்­போது இங்கே வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கின்ற இங்கே படித்த அறிக்கை இந்த ஆண்­டில் என்ன என்ன நாங்­கள் செய்­வோம் என்ற விருப்­பத்தை, எங்­க­ளு­டைய ஆசையை எங்­க­ளுக்கு உத­வு­கின்­ற­வர்­க­ளு­டைய ஆற்­ற­லை­யும் அறி­வை­யும் பயன்­ப­டுத்தி நாங்­கள் தெரிந்து கொண்­டுள்ள கொள்­கையை எப்­படி செயல்­ப­டுத்த முடி­யுமோ எப்­படி நாங்­கள் செயல்­ப­டுத்த வேண்­டு­மென்று ஆசைப்­ப­டு­கி­றோமோ அந்த வகை­யில் அதை நிறை­வேற்­று­வ­தற்கு அவர்­க­ளு­டைய திற­மை­யை­யெல்­லாம் துணை­யா­கக் கொண்டு திட்­டங்­களை தீட்­டு­கின்ற பொறுப்பை ஒப்­ப­டைப்­ப­தன் மூல­மும் அதை நாங்­கள் எங்­கள் உள்­ளத்­திற்கு ஏற்ப ஏற்­றுக் கொள்­கின்ற வகை­யிலே ஒரு முடிவு எடுத்து அதை ஒரு கோடிட்­டுக் காண்­பிக்­கின்ற முறை­யிலே தான் ஆளு­நர் உரை அமைக்­கப்­பட்டு இந்த அவை­யிலே வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது என்­பதை குறிப்­பிட விரும்­பு­கி­றேன்.

மக்­க­ளு­டைய பிர­தி­நி­தி­கள் ஆட்­சி­யிலே இருப்­ப­வர்­க­ளுக்கு எடுத்து காட்­ட­வும் சுட்­டிக் காட்­ட­வும் சில சம­யங்­க­ளில் இடித்து கூற­வும் அவர்­க­ளுக்கு உரி­மை­யி­ருக்­கி­றது என்­பது மட்­டு­மல்ல, கட­மை­யும் இருக்­கி­றது என்­பதை மன­மார நான் ஒப்­புக் கொள்­கி­றேன், எடுத்­துச் சொல்­ல­வும் ஆசைப்­ப­டு­கி­றேன்.

அந்த வகை­யில் அனைத்து கட்­சியை சேர்ந்­த­வர்­க­ளும் தலை­வர்­க­ளும் தங்­க­ளு­டைய எண்­ணங்­களை எடுத்­துக் கூறி குறை­களை சுட்­டிக் காண்­பித்து ஒரு சில­வற்றை தங்­க­ளுக்கு மன­திற்கு சரி­யென்று ஒப்­பு­தல் அளிக்­க­லாம் என்ற விதத்­தில் அவர்­க­ளது மனம் எப்­படி அனு­ம­திக்­கி­றதோ அதற்­கேற்ப பேசி­ய­து­டன் ஆத­ரித்­தும் கண்­டித்­தும் தங்­கள் சந்­தே­கங்­களை தெளி­வு­ப­டுத்­திக் கொள்­வ­தற்கு இங்கே கேள்­வி­களை எழுப்­பி­யி­ருக்­கி­றார்­கள். அவர்­க­ளுக்­கெல்­லாம் நான் உண்­மை­யி­லேயே நன்றி கூற கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன்.

பிரச்­னை­களை ஒட்­டு­மொத்­த­மாக இங்கே எடுத்­துக்­கொண்டு பேச வேண்­டு­மென்று கரு­து­கி­றேனே தவிர, இதற்கு முன்பு நான் பதில் சொல்­வ­தற்கு எடுத்­துக் கொண்ட நேரத்­தைப்­போல், உறுப்­பி­னர் துரை முரு­கன் கவ­லைப்­பட்­டது போல் நீண்ட நேரம் நான் பேச மாட்­டேன் என்­ப­தை­யும் வெகு விரை­விலே முடித்­துக் கொள்­வேன் என்­ப­தை­யும் நான் நினை­வு­ப­டுத்த விரும்­பு­கி­றேன்.

இங்கே பலர் நம்­பிக்­கை­யில்லா தீர்­மா­னத்தை எடுத்­துக் கொள்­ளும்­போது கருத்­துக்­களை வெளி­யிட ஒதுக்கி வைத்­தி­ருக்­கின்ற அவர்­க­ளு­டைய எண்­ணத்­தைப் போலவே அதற்கு பதில் சொல்­லும்­பொ­ழுது என்­னு­டைய நேரத்­தில் கொஞ்­சம் அதி­க­மா­கக் கேட்டு வாங்­கிக் கொள்­ள­லாம் என்­ப­தால் இப்­போது நான் அதி­க­மாக நீட்டி விரி­வு­ப­டுத்­திப் பேச­வில்லை என்­ப­தை­யும் அந்த வகை­யில் உங்­க­ளுக்கு எவ்­வ­ளவு நேரம் ஆகுமோ என்ற கவலை வேண்­டாம். 

ஆளு­நர் உரை­யில் என்ன இருக்­கி­றது? இது எதற்­காக என்று கேட்­பது போன்ற கேள்­வி­க­ளை­யும், இதற்கு முன்­னால் சொல்­லப்­பட்­ட­வை­கள் என்­ன­வா­யிற்று, இதில் சொல்­லப்­பட்­ட­வை­களை எந்த வகை­யில் நிறை­வேற்­றி­வி­டப் போகி­றீர்­கள் என்ற ஐயத்­தை­யும் கிளப்­பி­னார்­கள். அதே நேரத்­தில், என்­னென்ன செய்ய வேண்­டு­மென்று உறுப்­பி­னர் சங்­க­ரய்யா போன்­ற­வர்­கள் எடுத்­துக்­காட்­டு­கின்ற வகை­யிலே பேசி­ய­தை­யும், நண்­பர் மாரி­முத்து போன்­ற­வர்­கள் சொன்ன ஆக்­கப்­பூர்­வ­மான யோச­னை­க­ளை­யும் மற்­றும் பல நண்­பர்­கள் அப்­படி சொன்­ன­தை­யும் நான் உள­மார வர­வேற்­கி­றேன்.

குறை கூறி­ய­வர்­க­ளை­யும், குறை கூறி­ய­தோடு ஆக்­கப்­பூர்­வ­மான யோச­னை­க­ளைச் சொன்­ன­வர்­க­ளை­யும் நான் உண்­மை­யி­லேயே மரி­யா­தை­யு­ட­னும், அவை­க­ளை­யெல்­லாம் உன்­னிப்­பாக கவ­னித்த பொறுப்­பு­ணர்ச்­சி­யு­ட­னும் இந்த பேச்சை நான் தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றேன் என்­பதை முத­லில் உங்­க­ளு­டைய உள்­ளத்­தில் பதிய வைக்க விரும்­பு­கி­றேன்.

பிரச்­னை­கள் நம்­மைச் சுற்றி எழு­கின்ற நேரத்­தில், அவ­ர­வர்­க­ளு­டைய இடத்­திற்­கேற்ப அந்த பிரச்­னை­களை சிந்­திக்க வேண்­டி­ய­வர்­க­ளாக நாம் ஆகி விடு­கி­றோம் என்­பதை என்னை விட அனு­ப­வம் பெற்ற பல முதி­ய­வர்­கள் இங்கே இருக்­கின்­றார்­கள், அனு­ப­வம் பெற்ற பெரி­ய­வர்­கள் இங்கே இருக்­கின்­றார்­கள் என்­பதை எண்­ணும்­பொ­ழுது அவர்­க­ளு­டைய கருத்­துக்­களை நாம் அலட்­சி­யப்­ப­டுத்­தி­விட முடி­யாது. ஒன்றை நான் தெளி­வு­ப­டுத்த விரும்­பு­கி­றேன். இந்த அர­சுக்கு பிடி­வாத குணம் இல்லை. நான் சொன்­ன­து­தான் சரி, நாங்­கள் செய்­த­து­தான் சரி என்ற எண்­ணம் நிச்­ச­ய­மாக இல்லை என்­பதை அத்­தனை மாமன்ற உறுப்­பி­னர்­க­ளும், தலை­வர்­க­ளும் நம்ப வேண்­டு­மென்­பது என்­னு­டைய பணி­வான வேண்­டு­கோ­ளா­கும்.

நாங்­கள் ''எல்­லாம் தெரிந்­த­வர்­கள்'' என்ற நிலை­யில் எங்­கள் கட­மையை செய்து கொண்­டி­ருக்­க­வில்லை என்­பதை பல­முறை எடுத்து சொல்­லி­யி­ருக்­கி­றேன். இங்கே பேரா­சி­ரி­யர் (அன்­ப­ழ­கன்) சொல்­லும்­பொ­ழுது, ''தவறு இருந்­தால் நான் திருத்­திக் கொள்­கி­றேன். மன்­னிப்­பும் கேட்­டுக் கொள்­கி­றேன்'' என்று அவரே சொல்­லும் பொழுது என்னை போன்­ற­வர்­கள் தவறு செய்து விட்­டால் நான் செய்­தது தவறு என்று சொன்­னா­லும், திருத்­திக் கொள்­கி­றேன் என்று சொன்­னா­லும், மன்­னிக்­கப்­பட வேண்­டி­ய­வ­னாக நான் இருந்­தே­னே­யா­னால் என்னை மன்­னி­யுங்­கள் என்று கேட்­ப­தும், அவ­ரை­விட எனக்கு மோச­மான காரி­யம் என்று தோன்­ற­வில்லை. அவரே செய்­வார் என்று சொல்­லும்­பொ­ழுது நான் அதை செய்­யக்­கூ­டிய அள­வில் தான் இருக்­கி­றேன் என்­பதை இங்கே குறிப்­பிட விரும்­பு­கி­றேன்.

இங்கே பேசி­ய­வர்­கள் பல­ருக்கு சில நேரங்­க­ளில் கோபம் வர வேண்­டிய நிலை­யில் நிகழ்ச்­சி­கள் இடைக்­கா­லத்­தில் நடந்­தி­ருக்­க­லாம். ஆனால் அந்த நிகழ்ச்­சி­க­ளுக்கு அடிப்­படை கார­ணம் என்ன என்­ப­தை­யும், அந்த நிகழ்ச்­சி­கள் தவிர்க்க முடி­யா­மல் நடந்து விட்­ட­தற்கு எந்த சூழ்­நிலை உத­விற்று என்­ப­தை­யும் அவர்­கள் கொஞ்­சம் பொறு­மை­யோடு சிந்­தித்து பார்ப்­பார்­க­ளே­யா­னால் எங்­கள் மீது அவர்­கள் அனு­தா­பம் கொள்­வார்­களே தவிர எங்­கள் மீது ஆத்­தி­ரப்­ப­டு­வ­தற்கு கார­ணம் இருக்­காது என்­பதை நான் நிச்­ச­ய­மாக நம்­பு­கி­றேன்.

தொழி­லா­ளர் பிரச்­னை­யைப் பற்றி ஆளு­நர் உரை­யிலே இல்­லையே என்­ப­திலே எல்­லோ­ருக்­கும், குறிப்­பாக, சி.பி.எம்., சி.பி.ஐ., மற்­றும் எதிர்க்­கட்­சித் தலை­வர்­கள், எதிர்க் கட்­சியை சார்ந்­த­வர்­கள் அத்­தனை பேருக்­கும் வருத்­தம். அதிலே குறை­யி­ருக்­கி­றது என்­பதை நான் மறுக்­க­வில்லை. முத­லி­லேயே சொன்­னேன், இந்த ஆளு­நர் உரை இந்த இடைக்­கா­லத்­தில் எப்­படி வந்து விட்­டி­ருக்­கி­றது என்­ப­தை­யும், இனி என்ன செய்ய போகி­றது என்­ப­தைப்­பற்­றி­யும் சிந்­திக்­கும்­பொ­ழுது, நிதி­நிலை அறிக்­கை­யிலே சொல்­லி­விட்டு அதற்­குப்­பி­றகு இங்கே நிறை­வேற்­றப்­பட வேண்­டு­மென்று நாங்­கள் விரும்­பு­கி­றோம். 

நாங்­கள் கொண்டு வர இருக்­கின்ற சட்­டங்­கள் நிறை­வே­று­வ­தற்கு முன்­னால் எதிர்க்­கட்சி தலை­வர்­க­ளும், எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளும், அல்­லது எங்­கள் கட்­சி­யில் இருப்­ப­வர்­கள் என்று கூட நான் சொல்­வேன், அவர்­க­ளுக்­கும் இந்த உரிமை வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது, அவர்­கள் ஏதா­வது திருத்­தங்­களை சொன்­னால் கூட, அவை­கள் உண்­மை­யிலே நடை­மு­றைக்கு ஒத்து வரக்­கூ­டி­யது என்று இருக்­கு­மே­யா­னால், கண்­டிப்­பாக நாங்­கள் அதை ஏற்­போம் என்­ப­தை­யும் சொல்­லிக் கொள்ள விழை­கி­றேன்.

தொழி­லா­ளர்­களை பற்றி ஒரு கொள்­கையை மட்­டும் நான் இங்கே தெளி­வு­பட சொல்ல விரும்­பு­கி­றேன். என்னை பொறுத்த வரை­யில் இரண்டு பிரச்­னை­களை முன் வைத்து தொழி­லா­ளர்­க­ளை­யும் தொழில் தக­ரா­று­க­ளை­யும் நான் கவ­னிக்க, சந்­திக்க விரும்­பு­கி­றேன். ஒன்று, உற்­பத்தி பெருக்­கம் அதி­க­மாக வேண்­டுமே தவிர உற்­பத்தி குறை­யக் கூடாது என்­ப­திலே எனக்கு அதிக அக்­கறை உண்டு. இதை சொல்­வ­தால் மற்­ற­வர்­க­ளுக்கு அந்த அக்­கறை இல்­லை­யென்று அர்த்­தம் ஆகாது.

அதே நேரத்­தில், தொழி­லா­ளர்­க­ளு­டைய உரிமை பறிக்­கப்­ப­டு­கி­றது என்ற நிலைமை ஏற்­ப­டு­கி­ற­பொ­ழுது இந்த அரசை பொறுத்த வரை­யில் தனித்­தன்மை வாய்ந்த முறை­யில், தனிப்­பட்ட முறை­யில், கையெ­ழுத்து வாங்கி ஒவ்­வொரு தொழி­லா­ளி­யாக, தொழில் அதி­பர்­கள் விலைக்க வாங்­கு­வது போல் அல்­லது ஏழ்­மை­யைப் பயன்­ப­டுத்தி அவர்­களை அடி­மை­யாக்­கு­வது போல், வேலைக்கு வைத்­துக் கொள்­கிற முறையை இந்த அரசு உண்­மை­யி­லேயே வெறுக்­கி­றது என்­ப­தை­யும் அதை ஆத­ரிக்க நாங்­கள் நிச்­ச­ய­மாக தாய­ராக இல்­லை­யென்­ப­தை­யும் எங்­கள் கொள்­கை­யாக நான் குறிப்­பிட விரும்­பு­கி­றேன். 

ஆனால், சில இடங்­க­ளில் நடை­பெ­று­கின்­ற­னவே என்று கேட்­டால் சில தீர்ப்­பு­கள் அவர்­க­ளுக்கு சாத­க­மாக இருக்­கின்ற நிலை­மை­க­ளை­யும் வெவ்­வேறு மாநி­லங்­கள், வெவ்­வேறு வகை­யிலே பலரை பயன்­ப­டுத்­திக் கொள்ள தயா­ராக இருக்­கிற நிலை­யி­லும் நாங்­கள் அதை விட்­டுக் கொடுக்­க­வும் முடி­ய­வில்லை. அதே சம­யத்­தில் எங்­கள் கொள்­கைக்கு நேர்­மா­றாக நடக்­கும்­போது அதை பொறுத்­துக் கொண்டு இருக்க முடி­ய­வில்­லை­யென்ற சங்­க­டத்­தில் இருக்­கி­றோம் என்­பதை ஒவ்­வொ­ரு­வ­ரும் நம்ப வேண்­டு­மென்­பது எனது பணி­வான வேண்­டு­கோ­ளா­கும்.  

(தொட­ரும்)