மேற்கு வங்க பாஜக மக்களவை எம்பி திடீர் ராஜினாமா

பதிவு செய்த நாள் : 01 ஆகஸ்ட் 2021 11:21

புதுடெல்லி, 

முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மக்களவை உறுப்பினருமான பாபுல் சுப்ரியோ (Babul Supriyo) தனது எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் அரசியலை விட்டு வெளியேற போவதாகவும் சமூக இணையதளத்தில் அவர் கூறியுள்ளார்.

பாபுல் சுப்ரியோ நன்றாகப் பாடக்கூடியவர் அரசியல்வாதியாக களமிறங்கினார் அவரை மத்திய அமைச்சர் ஆக்கியது. பின்னர் அவர் அமைச்சரவை பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

தன்னுடைய பேஸ்புக் பதிவில் அவர் மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும்,

திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி ஆகிய எந்த எதிர்க்கட்சிகளிலும் சேரப் போவதில்லை என்றும் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு வரிகளை மட்டும் பின்னர் பாபுல் சுப்ரியோ நீக்கிவிட்டார்.

அசன் சால் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுப்ரியோ 7 ஆண்டுகள் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் பணியாற்றினார். பின்னர் சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாறுதலில் அவர் அமைச்சர் பொறுப்பில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.

அமைச்சரவையில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததற்கும் அரசியலில் இருந்து விலகுவதற்கும் இடையில் நிச்சயம் தொடர்பு உள்ளது என்று பாபுல் சுப்ரியோ தன்னுடைய முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்த மத்திய மந்திரிசபை மாறுதல் என்பது பாபுல் சுப்ரியோ தவிர மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தேவஸ்ரீ சவுத்ரி மத்திய அமைச்சரும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.

அதே சமயம் மேற்கு வங்காளத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணை அமைச்சர்களாக மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாஜக தலைமைக்கும் தனக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாக பாபுல் சுப்ரியோ கூறினார்.

பாபுல் சுப்ரியோ ராஜினாமா மேற்கு வங்காள பாஜக தலைமைக்கு பெரும் தலைவலியாக இப்பொழுது மாறி இருக்கிறது.