வட்டு எறிதலில் நேரடியாக இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார் பஞ்சாப் வீராங்கனை கமல்

பதிவு செய்த நாள் : 31 ஜூலை 2021 11:03

டோக்கியோ

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான வட்டு எறிதல் போட்டியில் பஞ்சாப் வீராங்கனை கமல் பிரீத் கவுர் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் வட்டு எறிதல் பதிவு செய்துள்ள அனைவரும் ஏ, பி என்ற இரு தொகுப்புகளில் தகுதி போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவிலிருந்து மகளிர் வட்டு எறிதல் போட்டிக்கு 2 பேர் அனுப்பப்பட்டனர் கமல் பிரீத் கவுர் பி பிரிவிலும், புனியா ஏ பிரிவிலும் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

தகுதி சுற்றுப் போட்டிகளில் ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் 3 வாய்ப்புகள் தரப்படும்.

கமல் பிரீத் கவுர் முதல் வாய்ப்பில் 20.29 மீட்டர் தூரம் வட்டு எறிந்து இரண்டாவது வாய்ப்பில் 63.97 மீட்டர் எறிந்தார்

மூன்றாவது வாய்ப்பில் 64 மீட்டர் எறிந்தார்.

64 மீட்டர் எறிந்தவர்கள் அல்லது தகுதி சுற்று போட்டிகளில் 12 முதல் நிலை விளையாட்டு வீரர்கள் இறுதி சுற்றுக்கு அனுப்பப்படுவார்கள்.

கமல் பிரித் 64 மீட்டர் தூரம் வட்டு எறிந்த காரணத்தினால் அவர் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

ஒலிம்பிக் போட்டி வட்டு எறிதலில் தங்கம் வென்ற சான்றோ பெட்ரோல் இந்த முறையும் போட்டியில் கலந்து கொள்கிறார்.

அவர் பி பிரிவில் இருக்கிறார் அவர் எரிந்த தூரம் 63.75 மீட்டர் தான். தற்பொழுது உலக வட்டு எறிதல் சாம்பியன் பெரிஸ். கியூபா நாட்டை சேர்ந்தவர். அவர் எறிந்தது 63.18 மீட்டர்தான். ஆனால் கமல் எறிந்த தூரம் 64 மீட்டர். கமல் ஏற்கனவே 66.5 9 மீட்டர் தூரம் வட்டு எறிந்து உள்ளார்.

பி பிரிவில் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அமெரிக்காவை சேர்ந்த வீராங்கனை ஆல்மான் எறிந்த தூரம் 70.01 மீ.

கமல் பிரீத் கவுர் சிறிது முயற்சி செய்தால் தங்கப் பதக்கத்தை வெல்ல வாய்ப்பு உள்ளது.

ஏ பிரிவில் ஹரியானாவை சேர்ந்த வீராங்கனை புனியா வட்டு எறிந்தார்.

முதல் வாய்ப்பில் அவர் பவுல் செய்து விட்டார்.

இரண்டாவது வாய்ப்பில் எறிந்த தூரம் 60.57 மீ.

மூன்றாவது வாய்ப்பில் அவர் எறிந்தது 58.93 மீட்டர் தான்.

அவர் தனியாக ரஷ்யாவில் பயிற்சி பெற்று ஒலிம்பிக்கில் கலந்து கொண்டார்.

இதுவரை நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் புனியா கலந்து கொண்டிருக்கிறார். அவர் அதிர்ஷ்டம் இல்லாதவர் ஒருமுறைகூட அவர் இறுதி போட்டிக்கு தகுதி பெறவில்லை.


கமல்பிரீத் கவுர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது குறித்து மத்திய  அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.