சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புதிதாக வந்த ரஷ்ய ஆய்வுக் கோளால் குழப்பம்; தரையில் இருந்து விஞ்ஞானிகள் தீர்வு

பதிவு செய்த நாள் : 30 ஜூலை 2021 17:31

வாஷிங்டன்/ மாஸ்கோ, 

ரஷ்யா அமெரிக்கா கூட்டாகப் பராமரித்து வரும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வியாழன் அன்று புதிதாக நாவ்கா என்ற ரஷ்ய ஆய்வு கோள் வந்து சேர்ந்தது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இணைக்கப்பட்ட இந்த ஆய்வுக்கோளின் மோட்டார்கள் 3 மணிநேரம் கழித்து இயங்கத் தொடங்கின. அதனால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நிலைக்கோணம் மாறியது. மேலே 250 மைல்களுக்கு நிறுத்தப்பட்டிருந்த சர்வதேச விண்வெளி நிலையத்தின் உயரமும் குறையத் தொடங்கியது.

இந்த குழப்பத்தை தரையிலிருந்து ரஷ்ய மற்றும் நாசா விஞ்ஞானிகள் ஆணைகள் பிறப்பித்து சீர் செய்தனர்.

வழக்கமாக புதிதாக ஒரு செயற்கைக்கோள் விண்வெளி நிலையத்துக்கு வந்து இணைக்கப்பட்ட பிறகு அதன் இயக்க முறைகள் மாற்றப்பட்டு நிலைநிறுத்தப்படும் இதற்கான கட்டளைகள் தரையில் இருந்து அந்த செயற்கைக்கோளுக்கு அனுப்பப்படும். அதன்படி நாவ்கா ஆய்வுக் குழுவுக்கு தரையில் இருந்து ரஷ்ய விஞ்ஞானிகள் கட்டளைகளை பிறப்பித்தார்.

எதிர்பாராத வகையில் 3 மணி நேரம் கழித்து நாவ்காவின் மோட்டார்கள் இயங்கத் தொடங்கின.

அதனால் சர்வதேச விண்வெளி நிலையத்தின் இயக்க கோணம் மாறியது. சர்வதேச விண்வெளி நிலையம் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து உயரம் குறையத் தொடங்கியது.

இதனை தரையில் உள்ள ஆய்வு நிலையங்கள் கண்டுபிடித்தன.

உடனடியாக தனது ஆய்வுக்கோள் நெருக்கடி நிலையில் இருப்பதாக ரஷ்யா அறிவித்தது.

அப்பொழுது சர்வதேச விண்வெளி நிலையத்தில் மொத்தம் 7 விண்வெளி வீரர்கள் இருந்தனர் அவர்களில் 2 பேர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் 3 பேர் அமெரிக்காவின் நாசா விண்வெளி வீரர்கள் ஜப்பானைச் சேர்ந்த ஒரு விண்வெளி வீரரும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த ஒரு வீரரும் இருந்தனர்.

இவர்களுக்கு எந்த ஆபத்தும் வர வாய்ப்பு இல்லை என்று ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்தது.

ஆனால் நாசா தன்னுடைய புதிய போயிங் என்ற ஆளில்லா செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதை ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை உடனடியாக ஒத்திவைப்பதாக அறிவித்தது.

அதேசமயம் தரையில் இருந்து நாசா விஞ்ஞானிகளும் ரஷ்யாவிலிருந்து தேசிய விஞ்ஞானிகளும் ஒரே நேரத்தில் விண்வெளி நிலையத்தில் கோணத்தை சரி செய்யவும் அதன் உயரத்தை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கும் ஆணைகள் பிறப்பித்தனர்.

ரஷ்ய ஆய்வு கோளின் மோட்டார்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது. பின்னர் விண்வெளி நிலையம் மெதுவாக பழைய நிலைக்கு நகர்த்தப்பட்டது.  தரையிலிருந்து இருநாடுகளின்

தேவைப்பட்டால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் அப்பொழுது இருந்த 7 விண்வெளி வீரர்களையும் வேறு செயற்கைக்கோள் மூலம் காப்பாற்ற நடவடிக்கைகள் தயாராக இருந்தன.

திடீரென்று ரஷ்ய ஆய்வு கோள் இயங்கத் தொடங்கியதற்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.